மேலும் அறிய

Virumandi Abirami : நடிகைகள் வானத்துல இருந்து வரல.. மிதக்க தேவையில்ல.. அபிராமி சொன்ன லைஃப் சீக்ரெட்ஸ்

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது கணவர் குறித்தும், அவர் பலவருட நண்பர் என்பது குறித்தும் மேலும் அவர்களின் குழந்தை குறித்தும் பேசி உள்ளார்.

1995 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கதாபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவருடைய உண்மையான பெயர் திவ்யா கோபி குமார். இவர் 2001 இல் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

Virumandi Abirami : நடிகைகள் வானத்துல இருந்து வரல.. மிதக்க தேவையில்ல.. அபிராமி சொன்ன லைஃப் சீக்ரெட்ஸ்

விருமாண்டி

2004 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படத்தில் நடிகை அபிராமி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே கவனம் பெற்றார். இவை மட்டுமின்றி தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், ஆகிய பல படங்களிலும் நடித்தார். அதற்கு பின்னர் சரியாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் ஏசியாநெட் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்: நாம் அடக்குறதில்ல.. தழுவுகிறோம்.. ஜல்லிக்கட்டு இதுதான்.. விக்கிக்கு பாடம் சொன்ன கமல்ஹாசன்

திருமண வாழ்க்கை

இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேரளாவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்குப் பின்னும் நடிப்பதை நிறுத்தாமல் மூன்று படங்களில் நடித்து இருந்தார். இவர் தமிழில் கடைசியாக 36 வயதினிலே படத்தில் நடித்தார். ஆனால், அதற்கு பின்னர் இவர் கன்னடம், மலையாளத்தில் சில படங்களில் மட்டும் தோன்றி இருந்தாலும் தமிழ் பக்கம் வரவில்லை. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது கணவர் குறித்தும், அவர் பலவருட நண்பர் என்பது குறித்தும் மேலும் அவர்களின் குழந்தை குறித்தும் பேசி உள்ளார்.

Virumandi Abirami : நடிகைகள் வானத்துல இருந்து வரல.. மிதக்க தேவையில்ல.. அபிராமி சொன்ன லைஃப் சீக்ரெட்ஸ்

கணவர் பற்றி

ஆமாம் எங்களோட 14 வயசுல இருந்து நாங்க நண்பர்கள். நாங்க ரெண்டு பேருமே வெவ்வேற தளத்துல இருந்தாலும், எங்க ரெண்டுபேருக்கும் பொதுவான ஒரு தளத்தை கண்டுபிடிக்குறது ரொம்ப ஸ்வாரஸ்யமான விஷயம். நாங்க வீட்ல இருக்கும்போது அப்படிதான் இருக்கும். பொதுவாகவே நடிகைகளுக்கு ஒரு மன ஓட்டம் இருக்கும். நீங்க பூமிக்கு மேல பறந்துட்டு இருக்கீங்க. ஆனா அவ்வளவெல்லாம் இல்ல, கீழ வாங்கன்னு கூட்டிட்டு வர்றதுக்கு ஒருத்தர் இருந்தா நல்லாருக்கும்ல, அதுதான் எனக்கு அவர்.

குழந்தைகள்?

உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேட்டபோது, "எனக்கு ஒரு நாலு கால் பெண் குழந்தை இருக்காங்க. ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். பேரு மேங்கோ. நாங்க ஒரு சின்ன அழகான குடும்பம். நான், என் கணவர், எங்க குட்டி நாய் நாங்க சந்தோஷமா இருக்கோம்", என்று ஆரோக்கியா பால் விளம்பரம் போல கூறுகிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget