Actor Eshwar On Jayashree | ஜெயஸ்ரீயின் புது காதல்.. கார் ஏற்றி கொல்ல திட்டம்.. அதிர்ச்சி தகவல்களை அடுக்கும் ஈஷ்வர்
ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தனது ஆண் நண்பரான மருத்துவர் ராகவேஷுடன் Live - In உறவில் ஜெயஸ்ரீ வசித்து வருவதாக தெரிவிக்கிறார் ஈஷ்வர்.
கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை, ஆபீஸ், ராஜா ராணி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். இவர் சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஜெயஸ்ரீ ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெவ்வேறு தளங்களில் வசித்து வருகின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெயஸ்ரீ தனது கணவர் மீது வன்முறை தடுப்பு பிரிவின் கீழ் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் மகாலட்சுமி என்னும் சீரியல் நடிகையுடன் உறவில் இருப்பதாக தற்கொலை முயற்சி செய்தார் ஜெயஸ்ரீ. அதனை தொடர்ந்து ஈஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டார், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ஈஸ்வர் , தனது மனைவி ஜெய்ஸ்ரீ உயிருக்கு அவரின், புதிய காதலனின் தந்தையால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் , அவர் தனது ஆண் நண்பரான ராகவேஷுடன் Live - In உறவில் வசித்து வருவதாக தெரிவிக்கிறார் ஈஷ்வர். மேலும் அவர் ஒரு மருத்துவர் என்றும் , அவரது தந்தை தயாரிப்பாளர், தொழிலதிபர் மற்றும் அரசியல் செல்வாக்கு வாய்ந்தவர் என்றும் தெரிவிக்கிறார். மேலும் அவர் தன்னிடம் வந்து ஜெயஸ்ரீயையும் தனது மகனையும் பிரிக்க உதவுமாறு கேட்டதாகவும், ஆனால் எனக்கும் ஜெயஸ்ரீக்கும் சம்பந்தம் இல்லை , எனவே என்னால் தலையிட முடியாது என மறுத்துவிட்டதகவும் தெரிவிக்கிறார் ஈஷ்வர்.
ஜெயஸ்ரீ தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சண்முகம் என்னிடம் காட்டினார், அதனை நான் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன். மேலும் ஜெயஸ்ரீ தன் மகனை விடாவிட்டால் நான் அவரை கார் ஏற்றி கொன்றுவிடுவேன் என சண்முகம் , ஈஸ்வரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஈஷ்வர் ஒருவேளை அப்படி ஏதாவது சம்பவம் நடந்துவிட்டால் அந்த பழி என் மீது என்பதாலேயே முன்னெச்சரிக்கையாக புகார் அளிக்க வந்தேன் என ஈஸ்வர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியுள்ளார். மேலும் ஜெயஸ்ரீ பல ஆண்களுடன் பணத்திற்காக இப்படியாக பழகி வருகிறார் என நான் முன்பே கூறியிருந்தேன் என்றும் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் பலமுறை ஆஜராகவில்லை . அப்படியே வந்தாலும் தனது புதிய காதலனுடனே நீதிமன்றத்திற்கு வருகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் ஈஷ்வர்.
தற்போது காவல் ஆணையரிடம் ஆதாரங்களை முறையாக ஒப்படைத்த பின்னர்,அவற்றை பொதுவெளியில் வெளியிடுவேன் என்றும் ஈஷ்வர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.