Huma Qureshi: மெஷின் துப்பாக்கி எடுத்து இப்படி சுடணும்.. அனிமல் ரன்பீர் பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படும் வலிமை பட நடிகை!
Huma Qureshi: “வெரைட்டியான ஜானர்களில் திரைப்படங்கள் உருவாக்க வேண்டும். படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா என்பது பார்வையாளர்களின் தனிப்பட்ட விருப்பம்” - ஹூமா குரேஷி
அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'அனிமல்'. அப்பா மீது அதீத பாசத்தால் எல்லையைத் தாண்டும் முரட்டுத்தனமான ஒரு ஹீரோவாக நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருந்தார். இப்படம் வணீகரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டிய ஹூமா குரேஷி :
'காலா' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதலி ஜரீனா, வலிமை படத்தில் அஜித்து ஜோடி என நடித்து கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது 'அனிமல்' படத்தைப் பாராட்டி அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க தனது விருப்பத்தையும் பதிவு செய்தார்.
அவர் அனிமல் படத்தின் ரன்பீர் கபூர் நடிப்பு குறித்து பேசுகையில் "அனிமல் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. படத்தின் இசை, ஆக்சன் காட்சிகள் அனைத்தையும் ரசித்துப் பார்த்தேன். வெரைட்டியான ஜானர்களில் திரைப்படங்கள் உருவாக்க வேண்டும். படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா என்பது பார்வையாளர்களின் தனிப்பட்ட விருப்பம்” என்றார்.
ஹூமாவின் தனிப்பட்ட ஆசை:
எதிர்காலத்தில் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு நடிகராக இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பது அந்த நடிகருக்கு உற்சாகத்தை கொடுக்கும். ஆயிரக்கணக்கான மக்களை கொல்வது, துப்பாக்கியை பயப்படுத்துவது என படத்தின் ஒரு வில்லத்தனமான பகுதியில் நடிப்பது என்பது ஒரு நடிகருக்கு மிகவும் இன்ட்ரெஸ்ட்டிங்காக இருக்கும் என நினைக்கிறன்.
வோல்ஃப் ஆஃப் வோல் ஸ்ட்ரீட், அனிமல் போன்ற படங்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அது போல நான் நடித்ததில்லை. அதில் ஏதோ ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கிறது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார் ஹூமா குரேஷி. தற்போது ஹுமா, பூஜா மேரி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பில் கலக்கிய ரன்பீர் :
'அனிமல்' திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் படத்தின் டைட்டில் ஏற்றார் போல் ஒவ்வொரு காட்சியிலும் மிருகத்தனமாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ரன்பீரின் வித்தியாசமான நடிப்பு வெளிப்பட்டது. எனினும் கருத்து ரீதியாக அனிமல் திரைப்படம் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து பெற்று வருகிறது.