Valimai Movie: ஒரே நாளில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகர்..! புகைப்படத்தை பகிர்ந்து ஐ லவ் யூ சொன்ன ஹியூமா !
வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகருக்கு மிக்க நன்றி என்று அந்த படத்தின் ஹீரோயின் ஹியூமா குரோஷி உணர்ச்சிப்பூர்வமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் மூன்றாண்டுகளாக எடுக்கப்பட்டிருந்த வலிமை திரைப்படம் கடந்த 24-ந் தேதி வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபீசில் கலெக்ஷனை குவித்து வருகிறது.
படத்தின் நாயகியாக பிரபல இந்திப்பட ஹீரோயின் ஹியூமா குரோஷி நடித்துள்ளார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ஒரு இளைஞர் பற்றி பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ இது குமார். சென்னையில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் பணியாற்றியுள்ளார். பிப்ரவரி 24-ந் தேதி வெளியான வலிமை படத்தை 5 முறை பார்த்துள்ளார். லவ் யூ குமார். நீங்கள்தான் உண்மையான ரசிகன். உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Guys !! This is Kumar .. He works at Crowne Plaza, Chennai . He saw Valimai 5 times on February 24th, the day of release. Love you Kumar .. you are a true fan ❤️🙏🏻🤗💥🎉 Thank you for all the love !! #gratitude pic.twitter.com/DWEPFnnARu
— Huma S Qureshi (@humasqureshi) February 26, 2022
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். தமிழ் திரையுலகின் கிங் ஆப் ஓப்பனிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் முதல்நாள் கூட்டமும், முதல்நாள் வசூலும் அஜித் படத்திற்கு உள்ளது. இந்த நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரான குமார் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பணிபுரிந்து வருகிறார். வலிமை படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்னை வந்திருந்த ஹூயூமா குரோஷி இந்த இளைஞரை சந்தித்துள்ளார்.
அப்போது, குமாரிடம் வலிமை படம் பார்த்தீர்களா? என்று ஹியூமா குரோஷி கேட்டுள்ளார். அதற்கு அவர் படம் வெளியானது முதல் 5 முறை பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார். படம் வெளியாகி 3 நாட்களில் 5 முறை பார்த்துவிட்டேன் என்று அந்த இளைஞர் கூறியதால் ஹியூமா குரோஷி இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்