Hrithik Roshan's Upcoming Film: இந்தியில் விக்ரம் வேதா: ஹ்ரித்திக் ரோஷன் பிறந்தநாளில் வெளியாகிறது ஃபர்ஸ்ட் லுக்!
நாளை நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தமிழில் சூப்பர்ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் அதே பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தி உருவாக்கத்தில் நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷனும் சஃய்ப் அலிகானும் ராதிகா ஆப்தேவும் நடிக்கின்றனர். இதற்கிடையே நாளை நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு அன்றைய தினம் அவர் நடித்து வரும் விக்ரம் வேதா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் எனச் சொல்லப்படுகிறது. இதனை சினிமா விமர்சகர் தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தியில் இந்தப் படத்தை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'VIKRAM VEDHA': HRITHIK FIRST LOOK TOMORROW... Team #VikramVedha will unveil #FirstLook of #HrithikRoshan as #Vedha tomorrow, on his birthday... Costars #SaifAliKhan and #RadhikaApte... Directed by Pushkar-Gayathri, who directed the original #Tamil film. #VedhaFirstLook pic.twitter.com/LiYdDHXfri
— taran adarsh (@taran_adarsh) January 9, 2022
View this post on Instagram
தமிழில் மாதவன் விஜய் சேதுபதி நடித்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 2017ல் வெளியான விக்ரம் வேதா திரைப்படம். இந்தி ரீமேக் திரைப்பட ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் தளத்துக்கு அண்மையில், சர்ப்ரைஸ் விசிட் செய்தார் நடிகர் மாதவன். அதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Totally Blown with what you guys have done in terms of the mounting of this film.. @iHrithik looks like he is going to rule the World ❤️❤️🤗🤗🙏🙏.. what an attitude and look man . Phew .. This one one has “historic” & “ legendary” written all over it bro. ❤️❤️ https://t.co/axRZiV248f
— Ranganathan Madhavan (@ActorMadhavan) October 21, 2021