மேலும் அறிய

Fighter: முதல் நாளில் மட்டும் 90 ஆயிரம் டிக்கெட்கள் காலி.. மாஸ் காட்டும் ஃபைட்டர் திரைப்படம்!

குடியரசு தினத்தையொட்டி வெளியாக இருக்கும் ஃபைட்டர் படம் இதுவரை 3 கோடிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளது

வெளியாகும் முதல் நாளுக்கான முன்பதிவில்  மட்டுமே 90 ஆயிரம்  டிக்கெட்களை விற்பனை செய்துள்ளது ஹ்ரித்திக் ரோஷன் தீபிகா படுகோன் நடித்திருக்கும் ஃபைட்டர் திரைப்படம் .

ஹ்ரித்திக் ரோஷன்

ஹ்ரித்திக் ரோஷன், 1980 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். 2000இல் வெளிவந்த "கஹோ நா.. பியார் ஹை" திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் அளவில் மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளையும் வென்று குவித்தது. அதன்பின் 2003ஆம் ஆண்டு வெளிவந்த சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமான "கோய் மில் கயா" திரைப்படம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் திரைப்படத்திற்காக அவர் இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா. தமிழில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதாவின் ரீமேக்காக வெளியான இந்த திரைப்படத்தில், ஹ்ரித்திக் ரோஷன் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் மாபெரும் ஹிட் அடித்த இந்த திரைப்படம் ஹிந்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஃபைட்டர்

ஷாருக் கான்  நடித்து பதான் , மற்றும் வார் உள்ளிட்ட படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ஃபைட்டர். ஹ்ரித்திக் ரோஷன் , தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் க்ரூவர், அக்‌ஷய் ஓபராய் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மம்தா ஆனந்த் ரமோன் சிப், அங்கு பாண்டே, கெவின் வாச், அஜித் அந்தாரே ஆகியவர்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். வரும்  ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

முன்பதிவில் வசூல்

ஃபைட்டர் படத்தில் இதுவரை மூன்று பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டிற்காக போராடும் விமானப்படை வீரர்கள், ஆகாயத்தில் ஆக்‌ஷன் காட்சிகள், ஹ்ரித்திக் மற்றும் தீபிகாவுக்கு இடையில் காதல் காட்சிகள், சோலோவாக சண்டையில் அசத்தும் தீபிகா என ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்திற்காக அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு படமாக ஃபைட்டர் படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஃபைட்டர் படத்திற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் மட்டும் இப்படத்தின் டிக்கெட் விற்பனை குறித்த விபரங்களை சாக்னிக் தளம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஃபைட்டர் படம் முதல் நாளில் மட்டும் முன்பதிவில்  90 ஆயிரம்  டிக்கெட்களை விற்பனையாகியுள்ளது. இதில் 36,454 டிக்கெட்கள் 2D , 50,770 டிக்கெட்கள் 3D மற்றும் 6 ஆயிரம் டிக்கெட்கள் ஐமேக்ஸ் காட்சிகளுக்கு முன்பதிவாகியுள்ளன. மொத்தம் 3 கோடி ரூபாய் இதுவரை முன்பதிவில் வசூல் செய்யப் பட்டுள்ளதாக இந்த தளத்தில் கூறப்ப்ட்டுள்ளது. ஃபைட்டர் படம் வெளியாக இன்னும் இரண்டு  நாட்கள் இருக்கும் நிலையில் ஒரு லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு ஆகும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget