Anurag Kashyap: 'இப்படி இருந்தா எப்படி ஜெயிக்கும்?' பாலிவுட்டை சல்லிசல்லியாக நொறுக்கிய இயக்குநர் அனுராக்!
பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் இந்தி சினிமா குறித்தும் அதன் வெற்றிதோல்வி குறித்தும் பேசியுள்ளார்
2018ம் ஆண்டு ஸ்பேனிஷில் வெளியான திரைப்படத்தை Dobaaraa என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். த்ரில்லர் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கான ட்ரெய்லர் வெளியீடு நடைபெற்றது.இந்த விழாவில் பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் கலந்துகொண்டார்.
Dobaaraa படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் சில கேள்விகளை முன்வைத்தார். குறிப்பாக இந்தி படங்கள் ஏன் வசூலில் சாதிப்பதில்லை எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அனுராக், '' ஏனென்றால் இந்தி படங்கள் வேறூன்றுவதில்லை. இதுதான் எளிமையான பதில். நீங்கள் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களை பாருங்கள். அவர்கள் தங்களுடைய கலாசாரத்தில் வேறூன்றி படத்தை உருவாக்குகிறார்கள். இங்கு இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட படம் இயக்குகிறார்கள். எங்கேயானாலும், கலாசாரத்தோடு படம் இணைந்து நின்றால் அது வெற்றியடையும். இங்கும் சில இயக்குநர்கள் அப்படி படம் இயக்குகின்றனர். அது வெற்றியடைகிறது.கங்குபாய் போன்ற படங்களில் இயக்குநர்கள் சரியாக வேலைபார்த்து வெற்றி அடைந்துள்ளனர்.கலாசாரத்தோடு வேறூன்றும்போது இந்தி படமும் வெற்றியடையும் என்றார்
View this post on Instagram
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமின்றி பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார் அனுராக். தமிழிலும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார் அனுராக். திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள அனுராக் தன் வீட்டில் பத்தாயிரத்துக்கும் அதிகமான டிவிடிக்களை சேகரித்து வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எனக்கு எப்போதெல்லா வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் திரைப்படங்களை டிவிடியாக விலை கொடுத்து வாங்குகிறேன். உலகம் முழுவதும், அனைத்து மொழிகளிலும் வெளியான திரைப்படங்களைச் சேகரித்து வருகிறேன். மும்பையின் சாரியாட் லைப்ரரியில் இருந்து முழு க்ரைடீரியான் பாக்ஸ் செட்டை வாங்கினேன். அப்போது என்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லாமல் இருந்த போதும், 1.5 லட்சம் ரூபாய் பணத்தை மூன்று மாதங்களில் படிப்படியாக செலுத்தினேன்.
நான் இன்றும் டிவிடிக்களை சேகரிப்பதன் காரணம் என்னவென்றால், ஓடிடி தளங்கள் தற்போது வெளியிடும் திரைப்படங்களை சில காலத்திற்குப் பிறகு நிறுத்திவிடுவார்கள் என்ற பயத்தினால் தான். தற்போது நான் பழைய க்ளாசிக் திரைப்படங்கள், மௌனத் திரைப்படங்கள் முதலானவற்றை சேகரித்து வருகிறேன். எல்லா திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் கிடைப்பதில்லை. மேலும், நான் வீட்டில் ஹோம் தியேட்டர் ஒன்றை நல்ல ஒலி அமைப்புடன் உருவாக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதன் காரணமாகவே திரைப்படங்களை டிவிடி, ப்ளூரே வடிவில் சேகரித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.