மேலும் அறிய

பிப்ரவரி மாதத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இது தான்!

கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் இந்த பிப்ரவரி மாதம் முக்கிய ஹூரோக்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கும் குறைந்து வருவதால் இந்த மாதம் RRR, வலிமை, எதிர்க்கும் துணிந்தவன், மிருகம், ஏய் சினாமிகா, வீரமே வாகை சூடும் போன்ற முக்கிய ஹுரோக்கள் நடித்த  திரைப்படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் திரையரங்குகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் பெரிய ஹூரோக்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சில மட்டும் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) முன்னிட்டு தமிழ் மட்டுமில்லாது பிற மொழிபடங்களும் திரையரங்கில் வெளியானது. குறிப்பாக புஷ்பா தி ரைஸ், சில நேரங்களில் சில மனிதர்கள், ஏஜிபி, நாய் சேகர், கொம்பு வச்ச சிங்கம்டா, என்ன சொல்ல போகிறாய் போன்ற படங்கள் வெளியான நிலையில் ரசிகர்களையும் வெகு அளவில் கவர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் இந்த பிப்ரவரி மாதம் முக்கிய ஹூரோக்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், என்னென்ன படங்கள் என இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • பிப்ரவரி மாதத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இது தான்!

பிப்ரவரியில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்:

வீரமே வாகை சூடும்: து பா சரவணன் இயக்கத்தில் விஷால் தயாரித்து மற்றும் இயக்கும் ஆக்ஷன் கலந்த திரில்லர் திரைப்படம் தான் வீரமே வாகை சூடும். இப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பிப்ரவரி 4ல் வெளியாகிறது. இப்படத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு, பாபுராஜ், ஜி. மாரிமுத்து, ரவீனா ரவி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பன்றிக்கு நன்றி சொல்ல வா: பாலா சரண் இயக்கத்தில் நிஷாந்த், சத்யாஇ நடிக்கும் நகைச்சுவை கலந்த திரில்லர் படம் இம்மாதம் 4 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு சுரேஷ் இசையமைத்துள்ளார். மக்களின் நகைச்சுவை கலந்த திரில்லர் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

கடைசி விவசாயி: இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இளையராஜா இசையமைத்துள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • பிப்ரவரி மாதத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இது தான்!

மகான்: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் மகான் என்ற அதிரடி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி ஓடிடியில் ரீலியாக உள்ளது. லலித் குமார் தயாரிக்கும் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படம் தமிழ் மொழி மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

FIR : இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடித்த அதிரடி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆர்யன் ரமேஷ் தயாரித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வத் இசையமைக்கிறார். இப்படம் தீவிரவாதத்தை அடிப்படையாகக்கொண்டு இயக்கப்பட்டுள்ள அதிரடி திரைப்படமாகும்.

  • பிப்ரவரி மாதத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இது தான்!

வலிமை: அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த வலிமை திரைப்படம் எப்போது ரீலிஸ் ஆக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர். இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.  போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் படத்தில், ஹுமா எஸ் குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்யுந்த் குமார், யோகி பாபு, ராஜ் அய்யப்பா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதேப்போன்று கணம், ஹே சினாமிகா, ஏஞ்சலினா, துருவ நட்சத்திரம், தேவதாஸ் பாரதி, துப்பறிவாளன், டாணாக்காரன் உளளிட்ட படங்களும் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Delhi Ganesh:
Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Delhi Ganesh:
Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Tamilnadu RoundUp: காலமானார் டெல்லி கணேஷ்! காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: காலமானார் டெல்லி கணேஷ்! காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் - தமிழ்நாட்டில் இதுவரை
தஞ்சாவூர்: ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4  பேருக்கு
தஞ்சாவூர்: ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு "குண்டாஸ்"
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Embed widget