Harish Kalyan Ivana: தோனி தயாரித்துள்ள தமிழ் படம்... ஹரீஷ் கல்யாண் - இவானா நடித்துள்ள ‘எல்ஜிஎம்’ டீசர் வெளியீடு!
கடந்த ஜனவரி மாதம் தோனி தமிழில் படம் தயாரிப்பது குறித்த இந்த அறிவிப்பு வெளியாகி கோலிவுட் வட்டாரத்துக்கு சர்ப்ரைஸ் தந்தது.
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்து வருகிறது.
இந்தியக் கிரிக்கெட்டின் தல தோனி அவரது மனைவி சாக்ஷி இருவரும் இணைந்து தங்கள் தோனி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் எல்.ஜி.எம் - Lets Get Married.
கடந்த ஜனவரி மாதம் தோனி தமிழில் படம் தயாரிப்பது குறித்த இந்த அறிவிப்பு வெளியாகி கோலிவுட் வட்டாரத்துக்கு சர்ப்ரைஸ் தந்தது.
இன்றைய இளம்பெண்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண், இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக லவ் டுடே மூலம் பெரும் பிரபலமடைந்த நடிகை இவானா நடிப்பதாகத் தகவல் வெளியானது. மேலும் பிரபல நடிகை நதியா இப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் சுவாரஸ்யமான போஸ்டர் ஒன்றும் வெளியானது.
இந்நிலையில் தற்போது எல்ஜிஎம் படத்தின் டீசர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. தமிழில் விட்னெஸ், தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கி, இசையமைத்தும் உள்ளார். நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று இந்த டீசர் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
Can’t keep calm..Too much thrilled!!!💃🏻
— Ivana (@i__ivana_) June 7, 2023
Here’s the teaser of #LGM for you.
Coming to cinemas soon!https://t.co/16P5xcotL0@DhoniLtd @msdhoni @SaakshiSRawat @Ramesharchi @iamharishkalyan @ActressNadiya @iyogibabu @rjvijayofficial @vp_offl @Actor_Srinath @VinodhiniUnoffl… pic.twitter.com/MxurC3hYom
எல்ஜிஎம் திரைப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஹரீஷ் கல்யாணின் குழந்தைப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களைக் குவித்தது.
சென்ற அக்டோபர் மாதம் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நர்மதா உதயகுமார் என்பவருடன் பிரம்மாண்டமான முறையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஹரீஷ் காதல் திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையைல், இது பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என ஹரீஷ் கல்யாண் தரப்பி விளக்கமளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஹரீஷ் கல்யாண் தற்போது டீசல், லப்பர் பந்து, நூறு கோடி வானவில் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Por Thozhil Review: சீரியல் கில்லர் கதை...சீட்டின் நுனியில் உட்கார வைத்ததா? ’போர் தொழில்’ திரைப்படத்தின் முழு விமர்சனம்!