![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Valimai Update | வலிமையில் முரட்டு சிங்கிளா அஜித்! அப்போ காலா நாயகிக்கு இந்த ரோலா?
இயக்குநர் ஹெச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார்.
![Valimai Update | வலிமையில் முரட்டு சிங்கிளா அஜித்! அப்போ காலா நாயகிக்கு இந்த ரோலா? H Vinoth: There is no romantic track in 'Valimai'! Huma has become Ajith's friend in the film Valimai Update | வலிமையில் முரட்டு சிங்கிளா அஜித்! அப்போ காலா நாயகிக்கு இந்த ரோலா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/07/0e94c9deb9374c8c7b1d660408789cdf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை அஜித்தின் முந்தைய படமான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தை போனி கபூர் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜ இசையமைத்துள்ளார்.
நேற்று படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது “கொரோனா காலத்திற்கு முன்னதாக படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஊரடங்கால் படப்பிடிப்பு நின்று போனது. அதேபோல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மூன்று பேர் கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பிற்கு வரவில்லை.அதன் பிறகு கதையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டியிருந்தது. படத்துல ஹ்யூமா குரேஷி மற்றும் தல அஜித்துக்கும் இடையில் எந்தவொரு ரொமான்ஸ் காட்சிகளும் கிடையாதாம். அவர்கள் இருவரும் படத்தில் நண்பர்களாகவே வலம் வருவார்கள்“ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அஜித்துக்கு ஜோடியாக ஹ்யூமா குரேஷி நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்திருக்கும் இந்த லேட்டஸ்ட் தகவல், படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. படத்தில் அஜித் முரட்டு சிங்கிளாக வலம் வருவார் போலும் , படம் நிச்சயம் ரசிகர்களும் மாபெரும் ட்ரீட்டாக இருக்கும் என நம்புவோம். வலிமை படத்தின் வெளியீடு எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு தேதியை அறிவித்திருந்தார். அதன்படி படம் வருகிற பொங்கல் பண்டிகை அன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமையவிருக்கிறது.
முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதன் பிறகு வலிமை படத்தின் லிரிக்கள் வீடியோவும் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. அதேபோல கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ டிரைலருக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது எனலாம், வெளியான ஐந்து நிமிடங்களிலேயே பல லட்சம் வியூஸ்களைக் கடந்தது. அந்த காட்சியில் பைக்கில் பறந்து வருகிறார் அஜீத் , அதேநேரம் ’கெட் ரெடி ஃபார் தி கேம்’ என்கிறார் வில்லன் , ‘நான் கேம் ஆரம்பிச்சாச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ என அதிரும் குரலில் அஜீத் வசனம் பேச அதிரவைப்பதாக இருந்தது அந்த முன்னோட்டம். படத்தில் அஜீத் கதாப்பாத்திரத்தின் பெயர் அர்ஜூன் என்பதும் குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வாங்கியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)