மேலும் அறிய

GV Prakash Speech: ”உங்க எதிர்காலத்த நீங்களே முடிவு பண்ணுங்க..” : கல்லூரி மாணவர்களிடம் அப்லாஸ் அள்ளிய ஜிவி பிரகாஷ்

நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாக செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காக காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள் என்றார்.

நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாக செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காக காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள் என ஜிவி பிரகாஷ் பேசியிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்)  ‘சம்பிரதா’ என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசும் போது, “ உங்களின் இந்த உற்சாகத்தை பார்க்கும்போது எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில இருக்கிறது. நான் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். பள்ளி நாட்களில் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்  கிரிக்கெட்டராக முயற்சி செய்திருப்பேன். இசை, நடிப்பு இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது எனக்கு கடினமாக தோன்றவில்லை.

                                                  GV Prakash Speech:  ”உங்க எதிர்காலத்த நீங்களே முடிவு பண்ணுங்க..” : கல்லூரி மாணவர்களிடம் அப்லாஸ் அள்ளிய ஜிவி பிரகாஷ்

உங்களின் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாக செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காக காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள் என்றார். அதைத்தொடர்ந்து பேச்சுலர், மதராசபட்டினம், ஆடுகளம் போன்ற படங்களிலிருந்து பாடல்களைப் பாடினார். 

அதனைத் தொடர்ந்து செல்ஃபி படத்தின் இயக்குநர் மதிமாறன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசும் போது, “முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். செல்பி படத்தில் ஒரு டயலாக் இருக்கும் இஞ்சினியரிங் என்று சொன்னாலே காரி துப்புறான் என்று எழுதியிருப்பேன்.
இது பொதுவாக சொல்லப்பட்டது கிடையாது இன்ஜினீயரிங்கை தவறாக பயன்படுத்தும் சிலருக்காக சொல்லப்பட்டது. எனக்கும் இன்ஜினியரிங் மிகவும் பிடிக்கும். நானும் இன்ஜினியரிங் படித்தவன். எனது நண்பன் ஒருவன்  இஞ்ஜினியரிங் படிக்கும்போது கார் வாங்கினார். சில பிரச்சனைகளால் அந்த காரை விற்றான். அவரிடம் எப்படி கார் வாங்கினான் என்பது குறித்து கேட்டபோது, இதே கல்லூரியில் அட்மிஷன் போடும் புரோக்கராக வேலை பார்த்ததாக கூறினான் .

                              GV Prakash Speech:  ”உங்க எதிர்காலத்த நீங்களே முடிவு பண்ணுங்க..” : கல்லூரி மாணவர்களிடம் அப்லாஸ் அள்ளிய ஜிவி பிரகாஷ்

அதை கதை கருவாக எடுத்துக் கொண்டு மற்ற விஷயங்களை சேர்த்து படமாக எடுத்தேன். கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்றவுடன் என் நினைவுக்கு வந்தது ஜிவி சார். அதனாலேயே அவர் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். கல்லூரி சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த கல்லூரி கலை விழாவில் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி. அடுத்ததாக ஜிவி சார் நடிக்கும் ஐங்கரன் படமும் கல்லூரி சம்பந்தப்பட்ட படம் தான். அந்த படத்தின் டிரைலரும் இங்கு திரையிட்டது பொருத்தமான ஒன்று. மாணவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார்.

ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி  வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget