Manjummel Boys: குணா vs மஞ்சுமெல் பாய்ஸ்.. இரண்டுக்குமான மிகப்பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா?
மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில், அப்படத்தில் காட்டப்பட்ட குணா குகை பற்றியும் பலரும் அறிந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில், அப்படத்தில் காட்டப்பட்ட குணா குகை பற்றியும் பலரும் அறிந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குணா vs மஞ்சுமெல் பாய்ஸ்
- 1991 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில், கமலின் கதை, திரைக்கதையில் வெளியான படம் “குணா”. இந்த படத்தில் ரேகா, ரோஷினி, ஜனகராஜ், நாசர்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த குணா படத்தின் பெரும்பாலானா காட்சி கொடைக்கானலில் எடுக்கப்பட்டது. அங்குள்ள குகை ஒன்றில் முக்கிய காட்சிகள் இடம்பெற்ற நிலையில் இப்படம் வெளியான பிறகு அந்த இடம் சுற்றுலா தலமாக மாறியது. அந்த இடம் “குணா குகை” என்றே அழைக்கப்படுகிறது.
- 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியானது. சிதம்பரம் இயக்கியுள்ள இப்படத்தில் சௌபின் ஷாஹிர் , ஸ்ரீநாத் பாசி , பாலு வர்கீஸ் , கணபதி எஸ். பொதுவால் , லால் ஜூனியர் , தீபக் பரம்போல் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் 2006 ஆம் ஆண்டு குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமலின் குணா பட காட்சிகளும் ஆங்காங்கே காட்டப்படுகிறது. குறிப்பாக கண்மணி அன்போடு பாடலை மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இவ்விரு படங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.
என்ன வித்தியாசம்?
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஷூட்டிங் எடுக்க தமிழக வனத்துறை இடம் படக்குழுவினர் கேட்டபோது முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் குணா குகை ஆபத்தானது என்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் படக்குழு கதையின் விவரத்தை சொல்லி அதன் பின்னர் 80 அடி வரை மட்டுமே செல்ல அனுமதி வாங்கியுள்ளனர். மொத்த குகையையும் புகைப்படமாக எடுத்து அதனை செட்டாக போட முடிவு எடுத்துள்ளனர்.
இதற்கான பல்வேறு இடங்களை தேடி அலைந்த போது பெரிய ஸ்டூடியோக்களில் அதிக ஆழம் குழி தோண்ட வேண்டும் என்பதால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து பெரும்பாவூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட செட்டில் தான் அந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது. திரையில் படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தத்ரூபமாக ஆர்ட் டீம் பணியாற்றி குணா குகையை தத்ரூபமாக வடிவமைத்து மேஜிக் செய்துள்ளது.
அதேபோல் இந்தப் படத்தில் நண்பர்கள் ஒரு மரத்தின் மேல் நிற்பது போல் நிற்கும் காட்சி இடம் பெற்றிருக்கும் அந்தக் காட்சியும் அந்த காட்சியில் வரும் மரமும் செட்டு தான் என நேர்காணலில் படத்தில் நடித்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் கமல் குணா குகையை கஷ்டப்பட்டு கண்டுபிடித்துள்ளார். அவரும், சந்தான பாரதியும் கொடைக்கானல் பகுதியில் ஷூட்டிங் லோகேஷன் பார்க்க சென்றுள்ளனர். அப்போது இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத, மக்கள் நடமாட்டமில்லாத இடங்களில் படமாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். கிட்டதட்ட இருவரும் 7 கிலோ மீட்டர் வரை சென்றும் எந்த இடமும் சிக்காமல் இருந்துள்ளது. அதன்பின்னர் திரும்பி போகலாம் என முடிவெடுத்த நிலையில் இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் பார்க்கலாம் என நினைத்துள்ளனர். அப்படி சென்றவர்களுக்கு குணா குகை கண்ணில் பட, முழு படமும் உருவாகிவிட்டது. 2