மேலும் அறிய
Advertisement
Most Searched Movie: 2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படம் எது தெரியுமா?
Most Searched Movie on Google 2023: ஷாருக்கானின் நடிப்பில் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் படங்களில் சர்வதேச அளவில் கூகுள் தேடலில் இடம்பெற்றுள்ளது.
Most Searched Movie: 2023ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படமாக ஷாருக்கான் நடித்த ஜவான் படம் உள்ளது. இதேபோல் சர்வதேச அளவில் அதிகமாக தேடப்பட்ட படங்களின் வரிசையில் ஜவான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
கூகுளில் அதிக தேடல்:
நடப்பு ஆண்டிற்கான கூகுள் தேடலில் அதிகம் இடம்பெற்ற படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் இருந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 படங்களில் ஜவான் முதல் இடத்திலும், சன்னி தியோல் நடித்த காடர் 2 படம் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ஓபன்ஹெய்மர் மூன்றாவது இடத்திலும், பிரபாஸ் நடித்த ஆதிபுரூஷ் 4 வது இடத்திலும், ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் 5வது இடத்திலும் உள்ளன.
6வது இடத்தில் தி கேரளா ஸ்டோரியும், 7வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெய்லர் படமும் இடம்பெற்றுள்ளன. 8வது இடத்தில் அண்மையில் திரைக்கு வந்த விஜய் நடித்த லியோ படமும், 9வது இடத்தில் டைகர் படமும், 10 வது இடத்தில் விஜய்யின் வாரிசு படமும் உள்ளன.
சர்வதேச அளவில் முதலிடம் யார்?
இதேபோன்று சர்வதேச அளவில் அதிகமாக கூகுளில் தேடப்பட்ட படங்களில் வரிசையில் பார்பி முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக இரண்டாவது இடத்தில் ஓபன்ஹெய்மர் படமும், 3வது இடத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படமும் உள்ளன. 4வது இடத்தில் சவுண்ட் ஆஃப் ஃப்ரீடம் படமும், 5வது இடத்தில் ஜான் விக்: சாப்டர் 4, 6 வது இடத்தில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் படமும் உள்ளன. 7வது இடத்தில் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் தி ஒன்ஸ் படமும், 8வது இடத்தில் காடர் 2 படமும் உள்ளன. 9வது இடத்தில் கிரீட் 3 மற்றும் 10வது இடத்தில் ஷாருக்கானின் பதான் படங்கள் அதிகமாக கூகுள் தேடலில் இந்துள்ளன.
ஷாருக்கானின் நடிப்பில் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் படங்களில் சர்வதேச அளவில் கூகுள் தேடலில் இடம்பெற்றுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.1000 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த பதான் படம் இந்திய அளவில் ரூ.500 கோடிக்கு மேலும், உலகளவில் ரூ.1050 கோடிக்கும் மேலும் வசூலில் சாதனை படைத்துள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion