Godfather Movie: 'காட்பாதர்' படத்தில் சத்யப்ரியா ஜெய்தேவ்வாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!
நடிகர் சிரஞ்சீவியுடன் காட்பாதர் படத்தில் நடித்துள்ள நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!
விரைவில் வெளியாகவுள்ள காட்பாதர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாராவின் ப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
காட்பாதர் படம்:
டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘காட்பாதர்’. இந்த படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் தமனின் படதிற்கு இசையமைத்துள்ளார். ஆர் பி சவுத்ரியின் சூப்பர் குட் பில்ம்ஸ் புரோடக்ஷன்ஸ் இப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது. படம் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியகவுள்ளது. மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “லூசிபர்” படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளதால், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடி வருகிறது. நடிகர்கள் நயன்தாரா, சிரஞ்சீவி, பூரி ஜகன்நாத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு தென் திரையுரக ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இதில் காமியோ ரோலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். இது, ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியுள்ளது.
View this post on Instagram
படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு, மும்பை, ஊட்டி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் படம் உருவாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின் 67-வது பிறந்தநாள் அன்று, பர்த்டே ட்ரீட்டாக காட்பாதர் படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. வெளியான சில மணி நேரத்திலேயே பல மில்லியன் வீயூஸ்களை கடந்து வைரலானது காட்பாதர் படத்தின் டீசர். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் இடம் பெற்றிருந்த காட்சிகளும் ரசிகர்களை மிரளவைத்துள்ளது.
இதில், முதன் முறையாக ‘சால்ட் அன்ட் பெப்பர்’ ஹேர்ஸ்டைலில் சிரஞ்சீவி நடத்துள்ளார்.
இந்நிலையில், படத்தில் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
Introducing Lady Superstar #Nayanthara as 'Sathyapriya Jaidev' from the world of #GodFather ❤️🔥
— Konidela Pro Company (@KonidelaPro) September 8, 2022
First Single update soon🔥
GRAND RELEASE ON OCT 5
Megastar @KChiruTweets @BeingSalmanKhan @jayam_mohanraja @ActorSatyaDev @MusicThaman @LakshmiBhupal @AlwaysRamCharan @ProducerNVP pic.twitter.com/XEcTktasSj
இது குறித்த ட்விட்டர் பதிவில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சத்ய ப்ரியா ஜெயதேவ-ஆக நடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மகிழ்ச்சி!
சமீபத்தில், நயன்தாரா நடிப்பில் பெரிதும் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், காட்பாதர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழந்துள்ளனர். அது மட்டுமன்றி, மலையாளத்தில் சக்கைபோடு போட்ட லூசிபர் படத்தின் ரீமேக்தான் காட்பாதர் என்பதால், படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என்ற கருத்தும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.