Genelia Salman Dance Video: சல்மான்கானும் ஜெனிலியா டிசோசாவும் நடனமாடும் பட்டையைக் கிளப்பும் வீடியோ
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை ஜெனிலியாவும் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை ஜெனிலியாவும் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் சல்மான் கான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் பல வசூல் சாதனைகளை முறியடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது. அதேநேரத்தில் பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் சல்மான்கான்.
ஆனால் சல்மான்கானுக்கு இப்போதும் அனைத்து வயதிலும் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் சல்மான்கான் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர், அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்களுடன் மருத்துவமனையில் இருந்து புகைப்படங்கள் வெளியிட்ட பிறகே ரசிகர்கள் சாந்தம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று சல்மான்கான் தனது 56வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரின் பிறந்த நாளை ரசிகர்கள் மட்டுமல்லாது பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள் ட்வீட் செய்து வாழ்த்துக்களை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலமாக வாழ்த்து மழை குவிந்து கொண்டே இருந்தது. அதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று நடிகை ஜெனிலியா டிசோசா பகிர்ந்த வாழ்த்து வீடியோ.
நடிகை ஜெனிலியா இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.
அதன்பிறகு தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில் சல்மான்கான் பிறந்த நாளை முன்னிட்டு ஜெனிலியா பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சல்மான்கானுடன் அவர் நடனமாடும் அந்த வீடியோவில் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக உடையணிந்து இசைக்கு தகுந்த வண்ணம் நடனமாடியுள்ளனர். அந்த வீடியோவை பகிர்ந்து அதற்கு கீழ் “பாலிவுட்டின் மிகப்பெரிய மனம் படைத்த ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்று அண்ணனின் பிறந்தநாள்” என்று கேப்ஷன் கொடுத்ஹ்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்