![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
GVM Vijay Movie: தளபதி ஓ.கே சொன்னால் சூட்டிங் போயிடலாம்; யோகனை தூசி தட்டும் கவுதம் வாசுதேவ்
Thalapathy Vijay: நடிகர் விஜய்க்கு படம் பண்ண ஆசையாக இருப்பதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
![GVM Vijay Movie: தளபதி ஓ.கே சொன்னால் சூட்டிங் போயிடலாம்; யோகனை தூசி தட்டும் கவுதம் வாசுதேவ் Gautham Vasudev Menon Want to Do Film With Vijay Yohan is Still Alive LEO Tamil Cinema GVM Vijay Movie: தளபதி ஓ.கே சொன்னால் சூட்டிங் போயிடலாம்; யோகனை தூசி தட்டும் கவுதம் வாசுதேவ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/acf98f045dad3ddf6abc3ed564e2ee501688398120698102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Thalapathy Vijay: நடிகர் விஜய்க்கு படம் பண்ண ஆசையாக இருப்பதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டி ஒன்றில், லியோ படப்பிடுப்புத் தளத்தில் நடிகர் விஜயிடம் கதை கூறினீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் லியோ படப்பிடிப்புத் தளத்திற்கு நடிகனாகத்தான் சென்றேன், அதனால் அங்கு விஜயிடம் கதை கூறவில்லை. ஆனால், நான் ஏற்கனவே நடிகர் விஜயிடம் யோகன் படத்தின் கதையைக் கூறி அவரும் அதற்கு ஓ.கே சொல்லி இருந்தார். இப்போது வரை அந்த கதை அப்படியே தான் உள்ளது. இப்போது நான் எடுத்துள்ள துருவநட்சத்திரம் படத்தில் இருந்து முற்றிலும் இது வேறுபட்ட கதை. நடிகர் விஜயுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
யோகன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு, கவுதம் வாசுதேவ் மேனன் இயகக்த்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம். இப்படம் 2013ஆம் ஆண்டு திரைக்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக இருந்தது. இத்திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம்,எரோஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபுயுசர் ப்ரோடக்ஷ்ன் யூகே ஆகிய மூன்று தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பதாக அப்போது அறிவிப்பு வெளியானது.
முழுக்க முழுக்க நியூயார்க் நகரத்தைச் சுற்றி நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டிலேயே ஹாலிவுட் ரேஞ்சில் யோகன் அத்தியாயம் ஒன்று தயாராக இருந்தது, ஆனால் அதன் பின்னர், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் இருந்தே இப்படத்தை மீண்டும் எடுக்கும் திட்டம் கூறப்பட்டுள்ளதால், இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கப்படுமா என கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
விஜய் - கவுதம் வாசுதேவ் கூட்டணி
கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படம் வெளியானது. இந்த படத்தில் முதல்முறையாக அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மீண்டும் இந்த கூட்டணி ‘லியோ’ படத்தின் மூலம் ஒன்றிணைந்தது. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)