நீ எனக்கு செட் ஆக மாட்ட! இளையராஜா இசையில் பாட மறுத்த எல்.ஆர்.ஈஸ்வரி - என்ன காரணம்?
இசைஞானி இளையராஜா இசையில் எல்.ஆர். ஈஸ்வரி ஏன் பெரும்பாலும் பாடல்கள் பாடுவது இல்லை என்பதை எப்போதாவது யோசித்துள்ளீர்களா? இதற்கான காரணத்தை பார்ப்போம்.
இசைஞானி இளையராஜா
இசைக்கே ராஜா என்றால் அது இசைஞானி இளையராஜா தான். இவர் இசையமைக்காத ஹீரோவின் படங்களே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு எல்லா ஹீரோக்களின் படங்களிலும், இளையராஜா இசையமைத்துள்ளார். அதோடு, அவரோட பாடல்கள் எல்லாமே ஹிட் கொடுப்பதோடு மட்டும் இன்றி பட்டி தொட்டியெங்கும் ஃபேமஸ். அப்படிப்பட்ட ராஜாவின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பெரும்பாலும் பாடல்கள் பாடியதே இல்லை. இது ஏன் என்பது பற்றி கங்கை அமரனே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
இளையராஜா - எல்.ஆர்.ஈஸ்வரி
இளையராஜா - எல்.ஆர்.ஈஸ்வரி இருவரின் காம்போ இணைந்தது இல்லை என்றதும், பலரும் இருவருக்கும் இடையே ஏதேனும் சண்டை இருப்பதாக தான் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை. எல்.ஆர்.ஈஸ்வரி, இளையராஜாவை தம்பி தம்பி என்று தான் அழைப்பார். அவர் என் அண்ணனை விட 4 வயது மூத்தவர். எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவதை பார்க்க இளையராஜா அவரது ஊருக்கே சென்று காத்திருந்த காலங்கள் எல்லாம் உண்டு. அந்தளவிற்கு எல்.ஆர்.ஈஸ்வரி மீது இளையராஜாவும் அன்பு வைத்திருந்தார்.
இளையராஜாவின் இசை ஸ்டைல் வேறு. எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடும் ஸ்டைல் வேறு. இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தால் அது செட் ஆகாது. இதை எல்.ஆர்.ஈஸ்வரியே கூட கூறியுள்ளார். இதன் காரணமாக தான், இளையராஜா இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பெரும்பாலும் பாடல் பாடியது என்று கூறியிருக்கிறார்.
இளையராஜா இசையில் ஒரே ஒரு பாடல்
ஆனால், இளையராஜா இசையில் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. அதுவும் சிவாஜி கணேசன் படம். கே விஜயன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, குட்டி பத்மினி, விகே ராமசாமி ஆகியோர் பலர் நடிப்பில் வந்த படம் தான் நல்லதொரு குடும்பம்.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இவரது இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் டி எம் சவுந்தரராஜன் இணைந்து ஒன் டூ த்ரி என்ற பாடலை பாடியுள்ளனர். அதன் பிறகு எல்.ஆர்.ஈஸ்வரி இளையராஜா இசையில் எந்த பாடலும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இப்போதும் இருவரும் சந்தித்து கொண்டால் ஒருவருக்கொருவர் பாசமழை பொழிவார்களாம்.
இதே போன்று எல்.ஆர்.ஈஸ்வரியும் ஒரு பேட்டியில் இளையராஜா இசையில் ஏன் பாடவில்லை என்று கூறியிருக்கிறார். இளையராஜாவின் ஆரம்ப காலகட்டங்களில் ராஜாவின் இசையில் பாடல் பாட என்னை அணுகினார்கள். ஆனால், புதிதாக வரும் இசையமைப்பாளர்களுக்கு நான் பாடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன். அதனால் தான் அவரது இசையில் பாடல் பாட வாய்ப்புகள் இல்லை என்று என்பது குறிப்பிடத்தக்கது. எல்.ஆர்.ஈஸ்வரி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் 7000க்கும் அதிகமான பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.