Gandhi Godse Ek Yudh: படமாக மாறிய காந்தி கொலை சம்பவம்; 'காந்தி கோட்சே ஏக் யுத்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!
Gandhi Godse Ek Yudh: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாத்துராம் கோட்சே குறித்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு.
பிரிட்டீஷ் அரசர்களின் பிடியில் சிக்கி இருந்த இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர், மகாத்மா காந்தி. இவர், 1948ஆம் ஆண்டு நாத்துராம் கோட்சே என்ற நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காந்தி கோட்சே ஏக் யுத் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
காந்தி கோட்சே ஏக் யுத்!
வரலாற்று உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்படும் படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் அதிகம். அதிலும், பாலிவுட்டில் பானிப்பட், மங்கள் பாண்டே, அசோகா, வீர், ஜோதா அக்பர் என பல படங்களை எடுத்துள்ளனர். இந்த படங்களின் வரிசையில் தற்போது காந்தி கோட்சே ஏக் யுத் என்ற படம் இணையவுள்ளது; காந்தியை புது தில்லியில் சுட்டுக்கொன்ற நாத்துராம் கோட்சே-காந்திக்கு இடையே என்ன நடந்தது என்பது குறித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை, பிரபல இயக்குர் ராஜ்குமார் சந்தோஷி இயக்குகிறார். இப்படம், குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. காந்தி கோட்சே ஏக் யுத் படத்தின் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
View this post on Instagram
கம் பேக் கொடுக்கும் இயக்குனர்:
பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர், ராஜ்குமார் சந்தோஷி. 1982ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் இருக்கும் இவர், பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவர். லெஜண்ட் ஆஃப் பகத் சிங், தாமினி, தோளி சஜா கே ரக்னா உள்ளிட்ட பல படங்களை இய்ககியுள்ளார்; 2009ஆம் ஆண்டு ரன்பீர் கபூரின் நடிப்பில் வெளியான அஜாம் ப்ரெம் கி கஸாப் கஹானி என்ற படத்தை கடைசியாக இயக்கி இவர், அதன் பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் காெண்டார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ள காந்தி-கோட்சே ஏக் யுத் படம் மூலம் இவர் கம்-பேக் கொடுத்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பதான் உடன் போட்டியா?
ஷாருக்கான் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள படம், பதான். ஆடை சர்ச்சை, காவி நிற சர்ச்சை என பல பிரச்சினைகளைத் தாண்டி, இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது; இந்நிலையில், இப்படத்தை பதான் படத்திற்கு போட்டியாக ரிலீஸ் செய்கின்றனரா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகின்றன.