எனக்கு சுத்தமா உடன்பாடு இல்ல..குட் பேட் அக்லி இளையராஜா பாடல் சர்ச்சைப் பற்றி ஜிவி பிரகாஷ் ஓப்பன் டாக்
திரைப்படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவதில் தனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை என்று அது முழுக்க முழுக்க இயக்குநரின் தேர்வு என்று இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்

அண்மைக் காலங்களில் திரைப்படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய டிரெண்டாக உருவாகியுள்ளது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள். தனது பாடல்கள் குறித்தான காப்புரிமை தொடர்பான சட்டபோராட்டம் நடத்தி வருவதால் தனது பாடல்களை தன் அனுமதியின்றி பயண்படுத்தப்பட்ட படங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை நீக்கச் சொல்லி இளையராஜா வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றார். இந்த சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்
ஓடிடியில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 63 ஆவது படமாக குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இப்படத்தில் இளையராஜாவின் இளையராஜாவின் ஒத்த ரூபாய் தாரேன் பாடல் இடம்பெற்று ரசிகர்களிடம் பெரியளவில் வைரலானது. அனுமதியின்றி இப்பாடலை படக்குழு பயன்படுத்தியிருப்பதால் பாடலை நீக்கக் கோரி இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இதனால் பாடல்களை நீக்கும்வரை குட் பேட் அக்லி திரைப்படம் ஓடிடியில் திரையிடப்பட கூடாது என நீதிமன்றம் உத்தவிட்டதைத் தொடர்ந்து நெட்ஃளிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லி படம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. தற்போது இளையராஜா பாடல்களுக்கு பதிலாக படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்த பின்னணி இசை சேர்க்கப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் பதில்
திரைப்படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது குறித்து அண்மையில் கோபிநாத்தின் நேர்காணலில் ஜிவி பிரகாஷ் பேசினார். திரைப்படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவதில் தனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை என்று அது முழுக்க முழுக்க இயக்குநரின் தேர்வு என்று இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார் " நான் என்னுடைய சொந்த இசையை உருவாக்க விரும்புபவன். பழைய பாடல்களை பயன்படுத்துவதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. என்னிடம் கேட்டார்கள் என்றால் நான் முடியாது என்றுதான் சொல்லுவேன். ஆனால் இது முழுக்க முழுக்க இயக்குநரின் சாய்ஸ். அதில் நாம் தலையிட முடியாது. படத்திற்கு பின்னணி இசை உருவாக்கும்போது தான் இந்த காட்சியில் இந்த பழைய பாடல் வேண்டும் என்றே என்னிடம் சொல்வார்கள். நான் ஏன் இன்னொருவர் இசையமைத்த பாடல்களை என்னுடைய படத்தில் பயன்படுத்த விரும்பப் போகிறேன். கதைக்கு தேவையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அந்த பாடல்களை பயன்படும் பட்சத்தில் இந்த மாதிரி பாடல்கள் பயண்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியும் மற்றபடி நான் சொந்தமாக இசையை உருவாக்க விரும்புவம். பழைய பாடல்கள் பயண்படுத்தினால் படம் ஹிட் ஆகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்





















