மேலும் அறிய

'சிம்புவ எனக்கு பிடிக்கல.. ப்ளூ சட்டை மாறன அஜித் ரசிகர்கள் திட்டல' - சீரியஸ் மோடில் ஸ்ரீநிதி!

ஒரு பிரபல சேனலின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். சமூக வலைதளத்தில் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன் என்றார்

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதியை அறியாதவர்கள் தற்போது யாரும் இருக்க முடியாது. வலிமை படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பகிர்ந்ததில் இருந்து அவர் சமூக வலைத்தளங்களில் பல எதிர்வினைகளை சந்திக்க தொடங்கிவிட்டார்.

மன அழுத்தம்

அதன் பிறகு அவர்தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தனக்கு ஆறுதலாக யாரும் இல்லை என்பது போல  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் படு வைரலானது. இதனை தொடர்ந்து தான் சிம்புவை காதலிப்பதாக கூறி , அவர் வீட்டு முன்னால் அமர்ந்துக்கொண்டு தர்ணா செய்துக்கொண்டிருந்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nidhi (@sreenidhi_)

அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்த ஸ்ரீநிதிக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வர தொடங்கிவிட்டன. ஆனாலும் சிலர் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்துக்கொண்டு  “ இந்த பெண்ணிற்கு இப்போது மருத்துவ உதவி தேவை “ என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

’நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்’

இந்நிலையில், தனியார் சேனல் ஒன்றுக்கு முன்னதாகப் பேட்டியளித்த ஸ்ரீநிதி சிம்பு குறித்தும், தன் மனநிலை பற்றியும் மனம் விட்டுப் பேசியுள்ளார்.

“என்னை குழந்தை என சொல்கிறார்கள், எனக்கு இப்படி சொன்னால் கோபம் தான் வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் அது உண்மை என புரிகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nidhi (@sreenidhi_)

ஒரு பிரபல சேனலின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். சமூக வலைதளத்தில் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். எனக்கு என் சமூகத்தை பிடிக்கவில்லை. என் குடும்பத்தை பலர் ஏமாற்றியிருக்கிறார்கள்.

’ப்ளூ சட்டை மாறன் பேசினால் ஏற்றுக் கொள்கிறார்கள்’

நான் வலிமை படம் பற்றி தான் பேசினேன், அஜித் பற்றி பேசவில்லை. அஜித் பற்றி ப்ளூ சட்டை மாறன் பேசினால் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் ஒரு பெண்ணாக நான் பேசக்கூடாது என்று நினைக்கிறீர்கள்.

விண்ணைத் தாண்டி வருவாயாவும், போடா போடியும் என் கதைகள், நான் செய்யும் செயல்களை வைத்து இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

என் அம்மாவிடம் இதை சொன்னால் சிரிக்கிறார்கள். எல்லாரும் என்னை லேடி எஸ்.டி.ஆர் என்பார்கள். நான் சிம்பு மாதிரி இல்லை. சிம்பு தான் என்னை மாதிரி இருக்கார். எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது. மீடியா பிடிக்காது. திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வது தான் என் ஆசை.

சிம்புவை பிடிக்கவில்லை

சிம்பு என்னை காதலிக்கிறார் என நான் நினைத்தேன். நான் சிம்பு ரசிகை. சிம்புவின் படம் பார்த்து வளர்ந்துள்ளேன். சிம்புவை வெறும் நடிகராக நான் பார்க்கவில்லை. சிம்புவை ஒரு மனிதராக நான் பார்த்தேன்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nidhi (@sreenidhi_)

எனக்கு தேவதைக் கதைகளில் நம்பிக்கை உண்டு. அவர் தான் ரசிகர்களை வீட்டுக்கு வர சொன்னார். நான் சென்றேன். எல்லாரும் வாங்க என சொல்லும் அவர் எனக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். எல்லாருக்கும் அவர் என்னைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. நான் சிம்புவை ரசிப்பதை நிறுத்திவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் விஜய் டிவியில்  7சி சீரியலின் மூலம் அறிமுகமாகி, பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ’யாரடி நீ மோகினி’, ’புதுப்புது அர்த்தங்கள்’ போன்ற தொடர்களில் நடித்து தமிழ் சீரியல் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ஸ்ரீநிதி. ஆனால், தன் சமூக வலைதளக் கருத்துக்களால் தொடர்ந்து ஸ்ரீநிதி விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget