Upcoming Movies: ரீரிலீஸ் போதும்; புது படங்களைப் பார்க்கலாம்: இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள்!
மே 2வது வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்
மே இரண்டாவது வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள்
மே முதல் வாரம் அஜித் தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் சில படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. மே 2ஆவது வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை இனி பார்க்கலாம்.
ஸ்டார் (Star)
இந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்களில் ஒன்று கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார். பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இளன் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் வரும் மே 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இங்க நான் தான் கிங்கு ( Inga Naan Thaan Kingu)
ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் இங்க நான் தான் கிங்கு. இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மறைந்த மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ், மறைந்த நடிகர் சேஷூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வரும் மே 10 ஆம் தேதி கவினின் ஸ்டார் படத்துடன் மோத இருக்கிறது
ஸ்ரீகாந்த் (Srikanth)
தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா வின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் ஸ்ரீகாந்த். ராஜ்குமார் ராவ் ஸ்ரீகாந்த் பொல்லாவாகவும் ஜோதிகா அவரது அன்னையாகவும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். துஷார் ஹிராநந்னி இப்படத்தை இயக்கியுள்ளார் வரும் மே 10 ஆம் தேதி இப்படம் திரையரஙகில் வெளியாகிறது.
கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் ( Kingdom Of the Planet Of the Apes)
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவுகளில் ஒன்று பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படவரிசை. 1968 முதல் இதுவரை மொத்தம் 9 பாகங்கள் இந்த வரிசையில் உருவாகி இருக்கின்றன. இதில் தி மேஸ் ரன்னர் இயக்குநர் வெஸ் பால் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தி கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ். வரும் மே 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
தி பாய் அண்ட் தி ஹெரான் ( The Boy and the Heron)
அனிமே படங்களின் தந்தையாக கருதப்படும் ஹாயாவோ மியாஸாகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி ஆய் அண்ட் தி ஹெரான் . சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் விருதை இந்த ஆண்டு வென்றதைத் தொடர்ந்து வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆரோ ( Aaro)
ஜோஜு ஜார்ஜ் , அனுமோல் கே மனோகரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மலையாளத்தில் மே 9 ஆம் தேதி வெளியாகும் படம் ஆரோ. ரஷீத் பரக்கல் இப்படத்தை இயக்கியுள்ளார்.