மேலும் அறிய

Veerappan: வீரப்பனுக்கு இருந்த ஒரே பிரச்சனை.. இறந்த பின்பு நடந்தது என்ன? - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்

வீரப்பன் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்  The Hunt For Veerappan, கூச முனுசாமி வீரப்பன் என்ற பெயரில் ஆவணப்படமாக இந்தாண்டு வெளியாகியிருந்தது.

வீரப்பன் இறந்த பிறகு அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சொன்ன தகவல் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தமிழக காவல்துறையின் அதிரடி படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் வாழ்க்கை வரலாறு நெடுந்தொடராகவும், திரைப்படமாகவும் வெளியானது. இதனிடையே வீரப்பன் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்  The Hunt For Veerappan, கூச முனுசாமி வீரப்பன் என்ற பெயரில் ஆவணப்படமாக இந்தாண்டு வெளியாகியிருந்தது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படியான நிலையில் வீரப்பனை சுட்ட அதிரடிப் படைக்கு தலைமை வகித்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், வீரப்பன் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “ஆம்புலன்ஸில் இருக்கும் போது தான் வீரப்பன் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதே உண்மை. எங்களுடைய அதிரடிப்படை ஆபரேஷன் மிகச் சிறப்பாக இருந்ததாக சர்வதேச அளவில் இதுபோன்ற ஆபரேஷன்களை கையாள்பவர்கள் சொன்னது. மற்றவர்கள் சொல்வது மாதிரி விஷம் வைத்து எல்லாம் கொல்லவில்லை. வீரப்பன் காட்டை விட்டு வெளியே வர மாதிரி பிளான் பண்ணோம். அதனை வீரப்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன் என அவருக்கு வேண்டியவர்கள் தெரிவித்தார். ஆனால் இதுதான் என்னுடைய பணி, தொழில் தர்மம் என கூறினேன். 

தான் வெளியே வந்து சிகிச்சைப் பெற்றால் கண் பார்வை சரியாகும் என வீரப்பன் நம்பினார். அப்படிப்பட்ட ஒருவர் கண்பார்வை தெரியாமல் கைத்தடி வைத்து நடந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள். அங்கேயே வீரப்பன் கதை முடிந்துவிடும். அதனால் தான் பார்வையை சரி செய்ய அவர் நினைத்தார். அதேபோல் பணம் வாங்கிக்கொண்டு சிலர் வீரப்பனிடம் இருந்து ஓடி விட்டார்கள். அவர்களை இவரால் பிடிக்க முடியவில்லை. இதே பழைய வீரப்பனாக இருந்திருந்தால் மிகப்பெரிய தண்டனை கொடுத்திருப்பார். ஆனால் இவர்களுக்கு காட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் தொடர்புகள் இருந்தாலும் அந்த நபர்களை தண்டிக்க முடியவில்லை. 

இந்த மாதிரி சமயத்தில் தான் நாங்கள் வீரப்பனை வெளியே வர வைக்க பிளான் கொடுத்தோம். அதை அப்படியே நம்பி விட்டார். இதுதான் நடந்தது. வீரப்பன் இறந்த போது அவரின் உடலில் இருந்த உறுப்புகள் எல்லாம் நல்ல நிலையில் தான் இருந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் வள்ளிநாயகம் கூறினார். எலும்புகள், தசைகள் எல்லாம் சரியாக இருந்த நிலையில் ஒரே ஒரு பிரச்சினை கண்ணில் புரை இருந்தது தான் பிரச்சினையாக இருந்தது. எதிரியாக இருந்தால் கூட அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும். அந்த மாதிரி வீரப்பன் தவறான பாதைக்கு சென்று விட்டாலும், அதற்கு கூட ஏன் அப்படி சென்றேன் என நியாயப்படுத்தலாம். காவல்துறையில் இருந்ததால் பிளஸ் பாயிண்டுகளை விட மைனஸ் பாயிண்டுகளை தான் நான் பார்க்க வேண்டும்” என விஜயகுமார் கூறியிருப்பார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget