![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Unni Mukundan : உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
![Unni Mukundan : உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! First look poster of Unni Mukundan Marco Malayalam movie is out Unni Mukundan : உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/17/256718d8326bbe0f38c6e0f97de434e91718615218043729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உன்னி முகுந்தன் நடிக்கும் அடுத்த படத்திற்கு மார்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஹனிஃப் அடேனி இந்த படத்தை இயக்குகிறார்.
மலையாள திரையுலகில் தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் உன்னி முகுந்தன். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. உன்னி முகுந்தன் நடிக்கும் ஒவ்வொரு புதிய படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
எதிர்பார்ப்பை எகிற வைத்த 'மார்கோ' திரைப்படம்: ரசிகர்களை தாண்டி அனைத்து திரையுலகினரும் காத்திருக்கும் படம் உன்னி முகுந்தன் - ஹனிஃப் அடேனி கூட்டணியில் உருவாகும் 'மார்கோ'. க்யூப்ஸ் எண்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், ஷெரீப் முஹம்மது மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் இணைந்து 'மார்கோ' படத்தை தயாரிக்கின்றனர்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான 'மார்கோ' உருவாகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'மார்கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் மார்கோ படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மார்கோ படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. காரணம் இந்த கூட்டணியின் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். ஹனிஃப் அடேனி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்க, மேலும் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
எட்ஜ் ஆஃப் தி சீட் ஆக்ஷன் த்ரில்லர்: மல்லிகாபுரம், கருடன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை தொடர்ந்து உன்னி முகுந்தன் 'மார்கோ' படத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். ஒரு சிறந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மட்டும் இல்லாமல், ஐந்துக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ஒரு எட்ஜ் ஆஃப் தி சீட் ஆக்ஷன் த்ரில்லரை மார்கோ கொண்டுள்ளது. அனிமல் படத்தை போலவே வெறித்தனமான ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீப காலங்களில் மலையாளத்தில் இதுபோன்ற ஆக்சன் காட்சிகள் வெளியாகவில்லை. கலகிங் சன் உள்ளிட்ட பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் சிறந்த அதிரடி ஆக்சன் இயக்குனர்களால் ஆக்ஷன் காட்சிகள் கையாளப்பட்டுள்ளன. மார்கோ படம் பான்-இந்திய அளவில் வெளியாக உள்ளது.
View this post on Instagram
கூடுதல் சிறப்பம்சமாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமான ‘கேஜிஎஃப்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் மார்கோ படத்துக்கு இசையமைக்கிறார். ரவி பஸ்ரூர் முதன்முறையாக இசையமைக்கும் மலையாளப் படம் மார்கோ.
மேலும் மலையாளத்தில் முதல் வில்லன் ஸ்பின் ஆஃப் படம் என்ற பெருமை மார்கோவின் மற்றொரு சிறப்பு. உன்னி முகுந்தனுடன் மார்கோ படத்தில் சித்திக், ஜெகதீஷ், அன்சன் பால், கபீர் துஹான்சிங் மற்றும் அபிமன்யு திலகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் ரதி தரேஜா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் சில புதுமுகங்களும் நடித்துள்ளனர். தொழில்துறை ஜாம்பவான்களான க்யூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த முதல் படம் மார்கோ.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)