Watch video : மன கஷ்டத்தோடு பிரிந்த நடிகர் திலகம் உயிர்... கலைப்புலி தாணு சொன்ன அந்த உண்மை
Watch video : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கலைப்புலி தாணுவை அழைத்து தன்னுடைய மனதில் உள்ள பாரத்தை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞன், நடிப்பு சூறாவளி, நடிகர் திலகம், நடிப்பின் பல்கலைக்கழகம் என எத்தனை பெயர்களை வைத்து அழைத்தாலும் அவரின் திறமைக்கு ஈடு செய்ய முடியதா ஒரு பொக்கிஷமாக விளங்கியவர் சிவாஜி கணேசன். வாழ்நாளின் கடைசி வரை நடித்த அவர் இறப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் மனம் வேதனை பட்டு கூறிய விஷயம் பற்றி மனம் திறந்துள்ளார் பிரபலமான தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு.
1952ம் ஆண்டு வெளியான 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சிவாஜி கணேசன் தன்னுடைய அபாரமான நடிப்பிலால் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த மக்களின் பார்வையையும் அவர் பக்கம் திருப்பினார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களின் நாயகனாக தமிழ் சினிமாவின் நடிப்பு ஜாம்பவானாக கொடி கட்டி பறந்தார். அடுத்த கட்டமாக குணச்சித்திர நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தினர்.
நடிகர் சிவாஜி கணேசன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் மனதில் உள்ள பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் ஒரு முறை சிவாஜி கணேசன் கார் ட்ரைவர் முருகன் தாணுவுக்கு போன் செய்து ஐயா உங்களை பார்க்க வேண்டும் என விருப்பப்படுகிறார். அதனால் மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வர சொல்லி அழைப்பு வந்துள்ளது.
தாணுவும் அவரின் அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே அவர் அப்போது தான் கரெக்ட்டா சாப்பிட உட்கார்ந்துள்ளார். தாணுவை சிவாஜி கணேசன் எப்போது புலி என்று தான் செல்லமாக அழைப்பாராம். தாணு கூறுகையில் "என்ன புலி சீக்கிரம் வர சொன்னேன். பசியில உட்கார்ந்து இருக்கிறேன் என சொல்லி சாப்பிட்டுக்கிட்ட என்னையும் சாப்பிட சொன்னார்.
சாப்பிட்டு முடித்த பிறகு "புலி என்ன இருந்தாலும் மனசு வலி வந்து சாதாரண வலி இல்லை. என்னோட பேத்தியை பார்க்கும் போது கஷ்டமா இருக்குதுயா. என்ன பண்றது என மனசு ரொம்ப சங்கடப்பட்டு உருகுமா பேசினார். அப்போது தான் அவரின் பேத்தியின் கணவர் சுதாகர் ஜெயிலில் இருக்கிறார். பேத்தியை பார்க்க முடியலையா. கஷ்டமா இருக்கு. நான் எதுக்கு வாழனும். எங்க அண்ணன் எம்ஜிஆர் நல்ல பேரோட போயிட்டார். பெயர், புகழ், செல்வாக்கு என நல்லா போய் சேர்ந்துட்டார். நான் தான்யா பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன். மனசு கஷ்டமா இருக்கு புலி. சரி நீ போயிட்டு வா என என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னிடம் சொல்லி அனுப்பி வைத்த பதினைந்து நாளில் அவர் இறந்த செய்தி வந்தது என கூறி இருந்தார் கலைப்புலி தாணு.
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 3, 2024
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகர் தான் நடிகர் சிவாஜி கணேசன் பேத்தி சத்யலட்சுமியின் கணவராவார்.