Farm Laws Repeal: வேளாண் சட்டங்கள் வாபஸ்: ‛புரிந்துகொண்ட அரசுக்கு நன்றி’ -நடிகர் கார்த்தி ட்வீட்!
தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி - கார்த்தி
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாகவும் மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்.#FarmersProstest
— Actor Karthi (@Karthi_Offl) November 19, 2021
இதனையடுத்து விவசாயிகளும், அரசியல் தலைவர்களும் பிரதமரின் இந்த முடிவுக்கு தங்களது வரவேற்பை தெரிவித்துவருகின்றனர். அதேசமயம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல்களை மனதில் வைத்தே மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. எனவே நாடாளுமன்றத்தில் முறையாக சட்டங்களை வாபஸ் பெறும்வரை சற்று பொறுமை காக்க வேண்டுமென ஒரு தரப்பு கூறுகின்றது.
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்.#FarmersProstest
— Actor Karthi (@Karthi_Offl) November 19, 2021
இந்நிலையில் நடிகர் கார்த்தி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்ததற்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்