மேலும் அறிய

Director Marimuthu: விவேக் முதல் மாரிமுத்து வரை.. இந்தியன் 2 படத்தின் பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் சினிமா..!

இந்தியன் 2 படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் பல்வேறு விவாதங்களை கிளப்பி வைத்துள்ளது. இதனால் இயக்குநர் ஷங்கரும் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் பல்வேறு விவாதங்களை கிளப்பி வைத்துள்ளது. இதனால் இயக்குநர் ஷங்கரும் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மோசமான ஒரு சம்பவம் நடந்தது. நசரத்பேட்டையில் படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ், ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

இந்த சம்பவம் மறைவதற்குள் அடுத்த ஆண்டே இந்தியன் 2 படக்குழுவினருக்கு அடுத்தடுத்து 2 அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தன. இந்தியன் 2-ல் நடித்து கொண்டிருந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம் விவேக்கும், அக்டோபர் மாதம் நெடுமுடி வேணுவும் உயிரிழந்தனர். இரண்டு முக்கிய நடிகர்களின் இழப்பு இந்தியன் 2 குழுவுக்கு பேரிடியாக விழுந்தது. புதிய தொழில்நுட்பத்தை வைத்து இந்த 2 கதாப்பாத்திரங்களையும் திரையில் கொண்டு வர ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு அடுத்த ஆண்டே மற்றொரு இழப்பையும் சந்தித்தது இந்தியன் 2. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் மனோபாலாவும் உயிரிழந்தார். கடந்த மே மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்த 4 மாதங்களில் தற்போது நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரும்  இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்த இழப்புகளை சந்தித்து வருகிறது இந்தியன் 2. படப்பிடிப்பிலும் இயக்குநர் ஷங்கருக்கு இது சவாலான நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த கதாப்பாத்திரங்களில் வேறு யார் நடிக்கப் போகிறார்கள், இவர்கள் சம்பந்தமான காட்சிகள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளது, இயக்குநர் ஷங்கர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இதையெல்லாம் வைத்து இந்தியன் 2-க்கு ராசியே இல்லை என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வர ஆரம்பித்துள்ளது. அதோடு சேர்த்து கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவி பழி வாங்கிறதா என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் தமாசாக பேசப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget