மேலும் அறிய

ஸ்கிரிப்ட் பேப்பர் தர மாட்டேன்...அகம்பாவமாக பேசிய வெற்றிமாறன்...கொண்டாடிய ரசிகர்களே கடுப்பான தருணம்

தனது படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஸ்கிரிப் பேப்பர் தர மாட்டேன் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளதை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்

விடுதலை 2 க்கு அடுத்தபடியாக இயக்குநர் வெற்றிமாறன் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதனிடையில்  தயாரித்துள்ள பேட் கேர்ள் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் வடசென்னை 2  படத்தைப் பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். வெற்றிமாறன் சொன்ன ஒரு சில விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன

தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறோம்

கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பேனி சார்பாக திரைப்படங்களை தயாரித்து வந்த வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளார். இயக்குநராக இருப்பது சுதந்திரமானது ஆனால் தயாரிப்பாளராக இருப்பது என்பது மிகுந்த சவாலானது என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறினார். தனது தயாரிப்பில் பேட் கேர்ள் திரைப்படமே கடைசி படம் என அவர் இறுதி முடிவாக கூறினார்

வடசென்னை 2

சிம்புவை வைத்து வடசென்னையை மையப்படுத்திய கதையை இயக்கி வருகிறார் வெற்றிமாறன. இப்படத்தைப் பற்றி கூறியபோது ' வட சென்னை சிம்புவுக்கு எழுதின கதை. ஆனால் அது நடக்கவில்லை. தனுஷ் நடிப்பதாக முடிவான பின் கதையில் நிறைய மாற்றங்களை செய்தேன். தற்போது சிம்புவை வைத்து நான் இயக்கும் படம் முன்னதாக நான் எழுதிய அதே கதைதான் . இரண்டு கதைகளும் ஒரே காலகட்டத்தில் நடப்பதால் வடசென்னையில் வரும் சில கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெறுவார்கள் தனுஷை தவிர " என வெற்றிமாறன் தெரிவித்தார்

நடிகர்களுக்கு ஸ்கிரிப் கொடுக்க மாட்டேன்

தனது படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு தான் முழுமையான ஸ்கிரிப் பேப்பரை தருவதில்லை என வெற்றிமாறன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது " என்னுடைய படங்களில் நான் பெரும்பாலும் நடிகர்களுக்கு ஸ்கிரிப் பேப்பர் தரமாட்டேன். ஏனால் நான் திரைக்கதையே எழுதுவதில்லை. எந்த காட்சி எடுக்க போகிறோம் என்ன வசனம் என எதுவுமே அவர்களுக்கு தெரியாது. படப்பிடிப்பு தொடங்கும்போது 150 பக்கத்திற்கான கதை என்னிடம் இருக்கும் அதை வைத்து ஒவ்வொரு காட்சிகளையும் செட்டில் எழுதி நடிகர்களுக்கு கொடுப்பேன். இதனால் சில நடிகர்கள் என் படத்தில் நடிக்க மாட்டார்கள். " என அவர் கூறினார். வெற்றிமாறனின் கருத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.  கதையே இல்லாமல் நடிகர்கள் எப்படி நடிப்பார்கள். இதனால் தான் சூர்யாவின் வாடிவாசல் படத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர்களுக்கு ஸ்கிரிப் தரமாட்டேன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு வசதி இருக்கு.. எங்களுக்கு அப்படியா? - நடிகர் ஆரி வேதனை!
சிவகார்த்திகேயனுக்கு வசதி இருக்கு.. எங்களுக்கு அப்படியா? - நடிகர் ஆரி வேதனை!
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
Royal Enfield Upcoming Bike: EV பைக்.. 750 சிசி வண்டி.. 8 மாடல்களை இறக்கப்போகும் ராயல் என்ஃபீல்ட்!
Royal Enfield Upcoming Bike: EV பைக்.. 750 சிசி வண்டி.. 8 மாடல்களை இறக்கப்போகும் ராயல் என்ஃபீல்ட்!
Thalapathy Vijay: “நியாயம் ஜெயிக்கும்.. நாங்கள் உன் பக்கம்” - விவகாரத்து வழக்கில் விஜய்க்கு பிரபலங்கள் ஆதரவு!
Thalapathy Vijay: “நியாயம் ஜெயிக்கும்.. நாங்கள் உன் பக்கம்” - விவகாரத்து வழக்கில் விஜய்க்கு பிரபலங்கள் ஆதரவு!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
Embed widget