மேலும் அறிய

Jailer: அச்சச்சோ...! ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லையாம் - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

ஜெயிலர் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை என்றும் முதல் காட்சி காலை 9 மணிக்கே தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம்  உலகம் முழுவதும் வரும் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
அமெரிக்காவில் இப்போதே டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி விட்டன.

தமிழ்நாட்டில் 1,152 திரைகள் இருப்பதாகவும், அனைத்து தியேட்டர்களிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆர்வமாக இருப்பதாகவும், இதற்கு ரஜினிகாந்த் ஆவன செய்ய வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதிகாலை 6 மணிக்கு சிறப்பு காட்சியாக ஜெயிலர் படம் திரையிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிறப்பு காட்சி இல்லை என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கே தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Jailer: அச்சச்சோ...! ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லையாம் - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

ஏற்கனவே விஜய்யின் வாரிசு, அஜித்குமாரின் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து இருந்தது. ஆனால் விடுதலை, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், மாவீரன் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஷாக்கி ஷெராப், விநாயகன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினியின் நடிப்பில் வெளியாகும் படம் ஜெயிலர். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கிய நெல்சனுடன் ரஜினி முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கழுகை காகத்துடன் ஒப்பிட்டு ஒரு குட்டிக்கதை கூறி இருந்தார். இதன் மூலம் அவர் நடிகர் விஜய்யை தாக்கி பேசியுள்ளதாக  கூறி விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வரும் நிலையில், ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று ரஜினியின் ரசிகர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இப்படி ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க, 

Chandrayaan 3: பூமிக்கு டாட்டா... நிலாவுக்கு எண்ட்ரி கொடுத்த சந்திரயான் 3! நெக்ஸ்ட் மூவ் இதுதான்! பெருமிதத்தில் இஸ்ரோ!

Haryana Clash: பற்றி எரியும் ஹரியானா: 144 தடை உத்தரவு; பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்: இணைய சேவை துண்டிப்பு...என்ன காரணம்?

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Embed widget