தன்னை பற்றி வதந்தி பரப்பியவர்கள் என்று தெரிந்தும் நயன்தாரா செய்த செயல்..ரசிகர்கள் பாராட்டு
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அண்மையில் துபாய் சென்றிருந்த போது வலைப்பேச்சு பிஸ்மி , அந்தணன் , சக்திவேல் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துகொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

நடிகை நயன்தாரா மற்றும் கணவர் விக்னேஷ் சிவன் சமீப காலங்களில் தொடர் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார்கள். அந்த நிலை மாறி சமீபத்தில் நயன்தாராவின் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தன்னைப் பற்றி பலமுறை வதந்திகளை பரப்பி வந்த வலைப்பேச்சு யூடியுப் சேனல் நடத்தி வரும் பிஸ்மி , அந்தணன் மற்றும் சக்திவேல் ஆகிய மூவருடன் தனது குழந்தைகளுடன் நயன்தாரா புகைப்படம் எடுத்துக்கொண்டது ரசிகர்களிடம் பாசிட்டிவாக சென்று சேர்ந்துள்ளாது
த்ரிஷாவுடன் நயன்
துபாயில் நடிகர் அஜித் குமாரை சந்திக்க அண்மையில் நயன் கணவர் விக்னேஷ் சிவன் சென்றிருந்தார்கள். நடிகை த்ரிஷாவும் அப்போது துபாயில் தான் இருந்துள்ளார். நயன் மற்றும் த்ரிஷா இருவரிடையில் பிரச்சனை இருந்து வருவதாக பல வருடங்களாக கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றார்போல் இருவரும் இணைந்து எந்த நிகழ்ச்சியிலும் சரி சமூக வலைதளத்திலும் எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக் கொண்டதில்லை. பல வருடங்கள் கழித்து அண்மையில் நயன் மற்றும் த்ரிஷா இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். இதனால் இருதரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
வலைப்பேச்சு கும்பலுடன் புகைப்படம்
நயன்தாரா மற்றும் வலைபேச்சு தரப்பினரிடையிலான பிரச்சனை ரசிகர்கள் அறிந்ததே. தனுஷ் உடனான என்.ஓ.சி பிரச்சனையின் போது நயன் பற்றிய தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியிட்டது வலைப்பேச்சு . மேலும் நயன் அளித்த பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பும் மூன்று குரங்குகள் என கூறியிருந்தார். வலைப்பேச்சு பிஸ்மி , அந்தணன் மற்றும் சக்திவேல் ஆகிய மூவரை சுட்டிகாட்டியே அவர் அப்படி சொன்னதாக ரசிகர்கள் கூறினார்கள். துபாய் சென்றிருந்தபோது விமான நிலையத்தில் வலைப்பேச்சு கும்பலை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் சந்தித்தனர் . தன்னைப் பற்றி வதந்திகள் பரப்பியவர் என்றபோதும் தனது இருமகன்களுடன் அவர்களை பழக அனுமதித்து அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் நயன். பழைய பகைகளை வளர்க்காமல் சுமுகமாக பிரச்சனைகளை கையாளும் நயனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்
தமிழ்பேசும் குழந்தைகள் #உயிர் #உலகு pic.twitter.com/gHpIMjgNpq
— Valaipechu J Bismi (@jbismi_offl) January 20, 2026





















