Entertainment Headlines: ட்ரெண்டிங்கில் லோகேஷ், தலைவர் 171.. இஸ்ரேலில் சிக்கிய நடிகை.. இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Oct 08: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விரிவாகக் காணலாம்..
இசை நிகழ்ச்சி மூலம் வைப் பண்ண தயாராகிவிட்டார் விஜய் ஆண்டனி... எங்கு? எப்போது? விவரம் உள்ளே!
சமீபகாலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மியூசிக் கான்சர்ட் நிகழ்ச்சிகளை நடத்துவதை வழக்கமாகி வருகிறார்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்கள். ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜ், தேவா உள்ளிட்ட பலரும் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மக்கள் மத்தியிலும் இந்த லைவ் கான்செர்ட் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படிக்க
“விஜய் கெட்ட வார்த்தை பேச நான் தான் காரணம்” .. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்..!
லியோ படத்தில் விஜய் கெட்டவார்த்தை பேச நான் தான் கட்டாயப்படுத்தினேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் “லியோ”. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், ஜனனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க
சின்னாபின்னமான இஸ்ரேல்.. சிக்கிய பாலிவுட் நடிகை நுஸ்ரத்.. தற்போதைய நிலை குறித்து வெளியான தகவல்..!
இஸ்ரேலில் பாலஸ்தீன ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு பிரபல பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு நேற்றை தினம் யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் 5,000 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் எல்லைப்பகுதியாக உள்ள காசாவுக்கு இருநாடுகளும் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் படிக்க
ஐமேக்ஸ் கேமராவில் ‘தலைவர் 171’ ஷூட்டிங்.. ரஜினிக்காக லோகேஷ் வைத்திருக்கும் மாஸ்டர் பிளான்!
லியோ திரைப்பத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 (Thalaivar 171) படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ், ரஜினியை எந்த மாதிரியான ஒரு உலகத்துக்குள் காட்டப் போகிறார் என்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. தலைவர் 171 படம் குறித்து ஒரு சில தலவல்களை லியோ படத்தின் ப்ரோமோஷன்களில் பகிர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்! மேலும் படிக்க
என்னது.. விஜய்க்கு ஓப்பனிங் சாங் இல்லையா.. பில்ட்-அப் இல்ல.. லியோ முழுக்க முழுக்க லோகேஷ் படம்!
லியோ திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து வருகிறார். லியோ படத்தின் ரிலீசுக்குப் பின்னும் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். லியோ திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் என்ன புதிதாக செய்திருக்கிறார் என்று பார்க்கலாம். மேலும் படிக்க