மேலும் அறிய

Entertainment Headlines May 22: நடிகர் சரத்பாபு காலமானார்.. சிம்பு-48 அப்டேட்..! இன்றைய டாப் சினிமா செய்திகள்..!

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏ.பி.பி. நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

Entertainment Headlines May 22:

  • பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்..! கண்ணீரில் ரசிகர்கள்..!       

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சரத்பாபு. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் ஹைதரபாத்தில் இன்று காலமானார். அவர் உயிரிழப்பு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வாசிக்க..

பிரபல மூத்த நடிகர் சரத் பாபு(Actor Sarath Babu) உடல்நலக் குறைவால் இன்று ஐதராபாத்தில் காலமான நிலையில், அவரின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்

ஆந்திராவைச் சேர்ந்த சரத் பாபு, 1951ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். 1973-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 1977ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். ஒரு புறம்  கதாநாயகனாகவும் மற்றொரு புறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார். மேலும் வாசிக்க..

  • இந்தியன் -2 அப்டேட்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் வாசிக்க.

  • அஜித்குமார் - பைக் சுற்றுலா நிறுவனம்!

நடிகர் அஜித்குமார்(Actor Ajith Kumar) புதிதாக பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கும் “விடாமுயற்சி” படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையில்ன் பைக் பயணங்களில் ஆர்வம் கொண்ட அவர், முன்னதாக நடித்த துணிவு பட ஷூட்டிங்கின் போது  ஐரோப்பிய நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் வாசிக்க..

  • சிம்பு-48

நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிம்பு வேற மாதிரியான லுக்கில் ரசிகர்களுக்கு தெரிவார் என அப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். 

கமல் கூட்டணியில் சிம்பு 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அவரின் கம்பேக் படமாக் மாநாடு அமைந்தது. தொடர்ந்து மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்கள் வெளியானதால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே சிம்புவின் 48வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். மேலும் வாசிக்க..

  •  'எனக்கு எந்த மெசேஜூம் வரல..' அனுராக் காஷ்யப்பிற்கு ரிப்ளை தந்த விக்ரம்..! கென்னடி படத்தில் நடந்தது என்ன?

பிரான்ஸில் கென்ஸ் திரைப்பட திருவிழா கடந்த மே 16ம் தேதி தொடங்கி வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் 3 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. அதன்படி, மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் ‘கென்னடி’ படமும், ஃபோர்ட்நைட் பிரிவில் ‘ஆக்ரா’ படமும், பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவில் ‘இஷானோ’ படமும் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியில் உருவாகியுள்ள ராகுல் பட், சன்னி லியோன், மேகா பர்மன், அபிலாஷ் தப்லியாள், மோஹித் தல்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கென்னடி”. இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். மேலும் வாசிக்க..

மேலும் வாசிக்க..

Sarath Babu Death: நடிகர் சரத் பாபுவின் உடல் அடக்கம் எங்கே? எப்போது? முழு விவரம் உள்ளே..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget