மேலும் அறிய

Sarath Babu Death: பெரும் சோகம்.. பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்..! கண்ணீரில் ரசிகர்கள்..!

Actor Sarath Babu Death: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Sarath Babu Passed Away: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சரத்பாபு. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் ஹைதரபாத்தில் இன்று காலமானார். அவர் உயிரிழப்பு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் சரத்பாபு 

1977 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, முள்ளும் மளரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். தமிழ், தெலுங்கு சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் திறமை கொண்ட சரத்பாபு இதுவரை இரு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே 71 வயதான அவர், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடிகர் சரத்பாபுக்கு உடல் நலக்குறைவி ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடையவே 20ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஹி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கடந்த மே 3ம் தேதி இவர் காலமானார் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், நடிகர் சரத் பாபு நலமுடன் இருந்ததாக தெரிவித்தனர். 

இந்தநிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன. 

உடல் நல்லடக்கம் எப்போது..? 

மறைந்த நடிகர் சரத் பாபுவின் உடல் சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து நாளை (மே 23ஆம் தேதி) அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget