Entertainment Headlines May 19: ரஜினியின் கடைசி படம்... விஜய்யின் இமாலய சம்பளம்... ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ராஷ்மிகா பதில்... இன்றைய டாப் சினிமா செய்திகள்
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
![Entertainment Headlines May 19: ரஜினியின் கடைசி படம்... விஜய்யின் இமாலய சம்பளம்... ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ராஷ்மிகா பதில்... இன்றைய டாப் சினிமா செய்திகள் Entertainment Headlines Today May 19th Tamil Cinema News Latest Vijay Rajinikanth Lokesh Kanagaraj Rashmika Aishwarya Rajesh Vadivukkarasi Entertainment Headlines May 19: ரஜினியின் கடைசி படம்... விஜய்யின் இமாலய சம்பளம்... ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ராஷ்மிகா பதில்... இன்றைய டாப் சினிமா செய்திகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/73287c378f71f947c99c34005234390e1684492642407574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஜினியின் கடைசி படத்தை இயக்குகிறாரா லோகேஷ்...! மிஸ்கின் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதைவிட அதிர்ச்சிக்கரமானத் தகவல் என்னவென்றால் சினிமாவில் ரஜினி நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கலாம் என்கிற தகவல் தான். லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயுடன் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் படிக்க
தென் இந்தியாவில் நம்பர் ஒன் நடிகராகும் விஜய்...! ரூ. 200 கோடி சம்பளமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பதம் செய்யப்பட்டுள்ள தொகை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் வாங்காத சம்பளமாம். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்தப் படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்துவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 68' படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியானது. மேலும் படிக்க
எல்லா காலகட்டங்களிலும் பண நெருக்கடி... குடும்பத்துக்காக ஓடுறேன்.. எமோஷனல் ஆன வடிவுக்கரசி
தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லியாக மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் தரமான வில்லியாக தடம் பதித்தவர் நடிகை வடிவுக்கரசி. அன்னையர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வடிவுக்கரசி தனது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் கஷ்டங்களை குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். மேலும் படிக்க
விஜய்யின் அப்பாதான் வில்லனே...யார் தெரியுமா...? லியோ குறித்த லேட்டஸ்ட் தகவல்...!
தமிழ் திரையுலகில் தனது முதல் மூன்று படங்கள் மூலமாகே தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமான இவர், அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து திரளான ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். அடுத்ததாக, இவர் இயக்கத்தில் இரண்டாம் முறையாக விஜய் இணைந்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த ஐஷ்வர்யா... ராஷ்மிகா என்ன சொல்லி இருக்காங்க பாருங்க...!
புஷ்பா’ படத்தில் ராஷ்மிகாவை விட நான் பொறுத்தமாக இருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த விளக்கத்துக்கு நடிகை ராஷ்மிகா என்ன ரியாக்ட் செய்துள்ளார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அளித்த பேட்டி ஒன்றில் ”‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தார். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தில் நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன்” என்று கூறியிருந்தார். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)