Entertainment Headlines July 04: சசிகுமார் தந்த அப்டேட்... காதர்பாஷா ஓடிடி ரிலீஸ்... செல்வராகவனை இம்ப்ரெஸ் செய்த ரஹ்மான்.. டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today in July 04: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம்.
ஓடிடியில் வெளியாகும் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் ... உற்சாகத்தில் முத்தையா ரசிகர்கள்!
'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் முத்தையாவுடன் நடிகர் ஆர்யா முதன்முதலில் கூட்டணி வைத்த திரைப்படம் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’. இப்படத்தில் ஹீரோயினாக சித்தி இத்னானி நடித்த நிலையில், பிரபு, பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், தமிழ், ரேணுகா எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படிக்க
சுப்ரமணியபுரம் பத்தி சமுத்திரகனி சொன்ன சீக்ரெட் தெரியணுமா? (வீடியோ)
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு நடிகர் சமுத்திரகனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரகனி, ஸ்வாதி ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் திரைப்படங்களில் க்ளாசிக் படமாக கருதப்படுகிறது. மேலும் படிக்க
”நான் திரும்ப வர்ரேன்னு சொல்லு” - இயக்குனர் சசிகுமார் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்
சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் சசிகுமார் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சசிகுமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “இவை அனைத்தும் நேற்று நடந்தது போல உள்ளது. சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் சுப்ரமணியபுரம் படத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி அதனை கொண்டாடினீர்கள். மேலும் படிக்க
தலைவா ரஹ்மான்...இது நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் பாடல்...‘மாமன்னன்’ பாட்டை புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ரிப்பீட் மோடில் கேட்க வைத்துள்ளது. படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் - சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். மேலும் படிக்க
சினிமா டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி தாங்க - தமிழ்நாடு அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை
நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக திரையரங்கம் உள்ளது. இந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. இதில், தியேட்டர் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் படிக்க
விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்...? கவலையில் பாலிவுட் வட்டாரம்!
அமெரிக்காவில் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாகவும் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க