மேலும் அறிய

Selvaraghavan: தலைவா ரஹ்மான்...இது நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் பாடல்...‘மாமன்னன்’ பாட்டை புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்!

மாமன்னன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடலை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ரிப்பீட் மோடில் கேட்க வைத்துள்ளது.

படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் - சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்தப் பாடலின் வரிகளை எழுதியுள்ளார். ஒரு பக்கம் இந்தப் பாடலின் வரிகளை ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர் . ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பட பிரபலங்களும் இந்தப் பாடலை பாராட்டி வருகிறார்கள். தற்போது  இந்நிலையில், இந்தப் பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

மயக்கும் பாடல்

தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழிலே இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று . ஐயா ஏ.ஆர்.ரஹ்மான் தலைவா. நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள்.” என்று ஏ.ஆர்.ரஹ்மான், யுகபாரதி ஆகிய இருவரையும் பாராட்டியுள்ளார் செல்வராகவன்.

 

அலைகடல் ரசிகன்

முன்னதாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது அந்தப் படத்தில் இடம்பெற்ற  அலைகடல் பாடலையும் இதே போல் செல்வராகவன் சிலாகித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

”என் வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடலைக் கொண்டாடுவேன்”  என அலைகடல் பாடலைக் குறிப்பிட்டு செல்வராகவன் ட்வீட் செய்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் வழக்கமாகப் பணியாற்றி வந்துள்ள செல்வராகவன் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களை இவ்வாறு புகழ்ந்து பதிவிட்டு வருவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அனேகமாக தனது அடுத்தடுத்தப் படங்களுக்கு ரஹ்மானை இசையமைக்க வைக்கும் திட்டம் செல்வராகவனிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மாமன்னன்

 மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ராசாக் கண்ணு, நெஞ்சமே நெஞ்சமே, கொடி பறக்குற காலம், உச்சந்தல, வீரனே, மன்னா மாமன்னா மற்றும் ஜிகு ஜிகு ரயில் ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ராசா கண்ணுப் பாடலை வடிவேலு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget