Entertainment Headlines Aug 29: பழச மறக்காத ரஜினி.. ஓணம் கொண்டாட்டத்தில் நடிகர், நடிகைகள்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Aug 29: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
கடந்து வந்த பாதைய மறக்க மாட்டேன்.... கண்டக்டராக பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்த ரஜினி!
பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தது அங்கிருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் ஒரு சாதாரண பேருந்து நடத்துநராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பிறந்த ரஜினிகாந்த், முதலில் கண்டக்டராக அங்கு பணிபுரிந்து வந்த நிலையில், தன் 26ஆம் வயதில் திரைத்துறையில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார். மேலும் படிக்க
'தேசிய விருது எல்லாம் வேஸ்ட்'- நடிகர் விஷால் காட்டம்; நடந்தது என்ன?
8 பேர் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப விருது வழங்குவதில் தனக்கு உடன்பாடு இல்லை என தேசிய விருது குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் ’செல்லமே’ படத்தின் மூலம் அறிமுகமான விஷால், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகங்களுடன் முன்னணி பிரபலமாக வலம் வருகிறார். நடிகர் சங்கத்திலும் இடம்பெற்றிருக்கும் விஷால், தமிழ் திரையுலகில் செல்வாக்கு பெற்ற நடிகராக உயர்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஷாலுக்குதிரை பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் படிக்க
”எனக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம்”.. திடீரென வீடியோ வெளியிட்ட லாரன்ஸ்.. என்ன நடந்தது?
எனக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். படங்களில் நடிப்பதால் நல்ல வருமானம் வருகிறது. எனக்கு செய்யும் உதவியை ஆதரவற்ற மற்றவர்களுக்கு செய்யுங்கள் என நடிகை ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் 1993ம் ஆண்டு அர்ஜூன் நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அமர்க்களம், டான்சர், வருஷமெல்லாம் வசந்தம், பாபா, அற்புதம், தென்றல், பாண்டி என பல படங்களில் நடித்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் படிக்க
மேடையில் நடிகைக்கு திடீர் முத்தம்.. அத்துமீறிய தெலுங்கு இயக்குநர்.. கடுப்பான ரசிகர்கள்..!
தெலுங்கு சினிமா இயக்குநர் ஏ.எஸ்.ரவிகுமார் சவுத்ரி, பொது மேடையில் நடிகை மன்னரா சோப்ராவுக்கு திடீரென முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ராஜ் தருண் ஹீரோவாக நடிக்க இயக்குநர் ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி இயக்கும் திரைப்படம் ‘திரகபதர சாமி’. டோலிவுட் ரொமாண்டிக் காமெடி படமாக இப்படம் உருவாகி வருகிறது.தமிழ் திரைப்படங்களான ‘சண்டமாருதம் ’, ‘காவல்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை மன்னரா சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படிக்க
'தங்க தேரில் ஓணம் வந்தல்லோ' .. மாஸ் காட்டிய பிரபலங்கள்.. களைகட்டிய ஓணம் பண்டிகை..!
மலையாள நடிகர் மோகன்லால், துல்கர் சல்மான், பாடகி சித்ரா உள்ளிட்ட பலர் ஓணம் பண்டிகை கொண்டாடியதுடன், ரசிகர்களுக்கு தங்களுடைய வாழ்த்துகளை கூறியுள்ளனர். மகாபலி மன்னன் பாதாள உலகில் இருந்து நாட்டு மக்களை காண வரும் நிகழ்வாக ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் கேரளாவின் பாரம்பரிய ஆடை அணிந்து அனைத்து மத மக்களும் மலர் கோலங்கள் போட்டு மகாபலி மன்னனை வரவேற்கின்றனர். மேலும் படிக்க
உலகநாயகன்னா சும்மாவா... யூ ட்யூபில் சாதனை படைத்த ஹேராம்.. எப்படி தெரியுமா?
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனை நட்சத்திரம் எனக் கூறுவதைவிட கமல்ஹாசனை உச்சநட்சத்திரம் என்பதே பொருத்தமானதாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே சினிமாவில் நடிக்கும் கலைஞர்கள் அன்று முதல் இன்று வரை இருந்துகொண்டு இருந்தாலும், சினிமாவிற்காக தன்னை ஒப்புக்கொடுத்த கலைஞர்களில் கமல்ஹாசன் எப்போதும் முன்வரிசையில் தான் இருப்பார். மேலும் படிக்க
ஷாருக்கான் - நயன்தாராவின் கலக்கல் நடனம்... லைக்ஸ் அள்ளும் ஜவான் பட பாடல் ‘ராமய்யா வஸ்தாவய்யா’
ஜவான் படத்தின் மூன்றாவது பாடலான நாட் ராமய்யா வஸ்தாவையா பாடல் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. ஷாருக் கான் - அட்லீ - நயன் தாரா - அனிருத் ஆகியோர் முதன்முறையாகக் கைக்கோர்த்து பாலிவுட், கோலிவுட் என சினிமா துறையில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளறியுள்ள திரைப்படம் ஜவான். ரஜினி, விஜய், கமல் ஆகியோரின் வரிசையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகியுள்ளார். மேலும் படிக்க