Jawan New Song Out: ஷாருக்கான் - நயன்தாராவின் கலக்கல் நடனம்... லைக்ஸ் அள்ளும் ஜவான் பட பாடல் ‘ராமய்யா வஸ்தாவய்யா’
ஷாருக் கானின் சிக்னேச்சர் நடனத்துடன், நயன் தாரா, சான்யா மல்ஹாத்ரா ஆகியோரும் இப்பாடலில் நடனமாடியுள்ள நிலையில், இப்பாடல் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
ஜவான் படத்தின் மூன்றாவது பாடலான நாட் ராமய்யா வஸ்தாவையா பாடல் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
ஜவான் மூன்றாவது பாடல்
ஷாருக் கான் - அட்லீ - நயன் தாரா - அனிருத் ஆகியோர் முதன்முறையாகக் கைக்கோர்த்து பாலிவுட், கோலிவுட் என சினிமா துறையில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளறியுள்ள திரைப்படம் ஜவான். ரஜினி, விஜய், கமல் ஆகியோரின் வரிசையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகியுள்ளார்.
தீபிகா படுகோன் இரண்டாவது ஹீரோயினாக இப்படத்தில் நடிக்க, யோகி பாபு, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் வந்த இடம், ஹய்யோடா என இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது நாட் ராமய்யா வஸ்தாவையா பாடல் மூன்றாவது பாடலாக வெளியாகியுள்ளது.
ஷாருக் - நயன்தாரா அசத்தல் நடனம்
ஷாருக் கானின் சிக்னேச்சர் நடனத்துடன், நயன் தாரா, சான்யா மல்ஹாத்ரா ஆகியோரும் இப்பாடலில் நடனமாடியுள்ள நிலையில், ஷாருக் ரசிகர்களை ஈர்த்து இப்பாடல் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி தொடங்கி தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி இன்று பாலிவுட்டில் கால் பதித்து கிங் கானாக வலம் வரும் ஷாருக்கானை இயக்கி இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குநர் அட்லீ.
பான் இந்தியா படம்
மற்றொருபுறம் பதான் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு வெளியாகும் ஜவான் படம் ஷாருக் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் ஜவான் படம் பான் இந்தியா ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைபெற உள்ளதாகவும், இவ்விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளலாம் என்றும் கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இசை வெளியீட்டு விழா
நாளை ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த விழா நடைபெறும் என்றும், ஷாருக் கான், நயன்தார , அட்லீ ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் எனவும் தகவல் ஏற்கெனவே வெளியானது.
மேலும் ஜவான் படத்தின் பிரிவ்யூ எனும் பெயரில் படத்தில் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் மற்றொரு ட்ரெய்லர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.