Entertainment Headlines Aug 21: நெகிழ்ந்த ராதிகா... விஷ்ணு விஷால் ஆதங்கம்... தளபதி 68 அப்டேட்... இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Aug 21: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
ராதிகாவுக்கு 61வது பிறந்தநாள்: மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் சரத்குமார்!
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு 1978ம் ஆண்டு பாசத்திற்குரிய இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கி இன்று வரை வெகு சிறப்பாக பயணித்து கொண்டிருக்கிறார். இந்த வீர மங்கை தனது 61 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் படிக்க
காதலுக்கு நன்றி.. 9-ஆம் ஆண்டு திருமண நாள்... ஃபஹத் ஃபாசில் - நஸ்ரியா க்யூட் பதிவு!
மலையாள சினிமா தாண்டியும் தன் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இருப்பவர் நடிகர் ஃபஹத் ஃபாசில். ஃபஹத் மலையாளம் கடந்து ரசிகர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே தனது க்யூட் நடிப்பால் பிற மொழி ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை நஸ்ரியா. திரையுலகில் தன் கரியரின் உச்சத்தில் இருந்தபோது நஸ்ரியா மலையாள சினிமாவின் கவனத்தை மெல்ல தன் பக்கம் திருப்பி லைக்ஸ் அள்ளி வந்த நடிகர் ஃபஹத் ஃபாசிலை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் படிக்க
சமந்தா நியூயார்க் போறாங்க.. என்ன காரணம் தெரியுமா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சமந்தா ரூத் பிரபு தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். அவர் சினிமாத்துறையில் தனது நடிப்புத் திறனை நிலைநாட்டியுள்ளார். தற்போது நடிகை சமந்தாவிற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 41-வது உலகின் மிகப்பெரிய இந்திய தின அணிவகுப்புக்கு தலைமை தாங்கும் அரிய வாய்ப்பு சமந்தாவுக்கு கிடைத்துள்ளது. இந்த விழாவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் கலந்து கொள்கிறார். மேலும் படிக்க
’இதுதான் சந்திரயான் 3 அனுப்புன ஃபோட்டோ..’ கார்ட்டூன் போட்ட பிரகாஷ்ராஜ்.. மல்லுக்கட்டும் நெட்டிசன்ஸ்
நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம் சென்ற மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்த நிலையில், சென்ற 16ஆம் தேதி அது நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டதுடன், விண்கலத்தின் லேண்டர் அமைப்பான விக்ரம் தனியே பிரிந்தது. மேலும் படிக்க
யுவன் மட்டுமில்ல... விஜய் படத்தில் இணையும் ‘வாரிசு’ இசையமைப்பாளர்.. தளபதி 68 சுவாரஸ்ய அப்டேட்!
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தில் தமன் பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் ரிலீஸுக்காக உற்சாகமாகக் காத்திருக்கிறார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 பற்றிய அறிவிப்பு வெளியானது. மேலும் படிக்க
நல்ல மனிதர் என புகழ்ந்து தள்ளிய துல்கர் சல்மான் - உடனடியாக ரியாக்ட் செய்த யோகிபாபு...!
தனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் யோகிதான் என்றும், தனக்கு பிடித்த சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர் என்றும் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாக இருக்கும் கிங் ஆஃப் கோதா படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. 1980ம் ஆண்டுகளில் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ள கிங் ஆஃப் கோதாவில் கேங்ஸ்டராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் படிக்க
‘அந்த படம் நான் நடிக்க வேண்டியது'.. கார்த்தி படத்தைக் கண்டு ஆதங்கப்பட்ட விஷ்ணு விஷால்..!
பிரபல நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக திரையுலகில் வாய்ப்புகள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்ற நிலையில், கிடைத்த வாய்ப்பு, கை நழுவும்போதும், அதே வாய்ப்பு மற்றொருவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு பிரபலங்கள் வருத்தப்படுவார்கள். மேலும் படிக்க