மேலும் அறிய

Entertainment Headlines Aug 20: ஜெயிலர் ரூ.500 கோடி வசூல்... கவின் திருமணம்... அயோத்தியில் ரஜினிகாந்த்... இன்றைய சினிமா செய்திகள்

Entertainment Headlines Aug 20: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

அயோத்தியில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. டிரெண்டாகும் புகைப்படம்

இமயமலை சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட ரஜினி அயோத்திக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.  ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டு வந்த ரஜினி தற்போது அயோத்திக்கும் சென்றுள்ளார். ஜெயிலர் படத்தில் நடித்து முடித்த கையோடு வடமாநிலங்களில் உள்ள கோயிலுக்கு ரஜினி சென்று வருகிறார். மேலும் படிக்க

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே... கவின் - மோனிகாவின் க்யூட் திருமண புகைப்படங்கள்!

சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாகி கலக்கி வருபவர் கவின்.  இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போகிறார் என தகவல் ஏற்கனவே வெளிவந்தது. அதன்படி, இன்று காலை கவின் - மோனிகா திருமணம் விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

மீண்டும் ரூ. 500 கோடி: ரஜினிகாந்தின் 2வது படமாக சாதனை படைத்த ஜெயிலர்!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 500 கோடிகள் வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் சுமார் 1200 திரையரங்குகளிலும் உலகளவில் சுமார் 7000 திரையரங்குகளிலும் ஜெயிலர் வெளியான நிலையில்,  உலகம் முழுவதுமுள்ள ரஜினிரசிகர்கள் விழா மோடுக்கு சென்றனர். மேலும் படிக்க

கங்குவாவுக்காக வெறித்தனமான ஒர்க் அவுட்...சிக்ஸ் பேக்கில் அசரடிக்கும் சூர்யா... வைரல் புகைப்படம்!

கங்குவா படத்துக்காக நடிகர் சூர்யா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் மெருகேற்றியிருக்கும் புகைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இதுதான் எனக் கூறப்படுகிறது. மேலும் படிக்க

"ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கறுப்பு தினம்.." "21 வயசு சின்னவர் கால்ல விழுந்துட்டாரு" : புலம்பித் தீர்க்கும் நெட்டிசன்கள்!

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமாவின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் என வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், நேற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தார். அப்போது தன்னை விட 21 வயது இளையவரான யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து அவர் ஆசிர்வாதம் பெற்றது இணையத்தில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும் படிக்க

நான் பெரியாரிஸ்ட் என்பதுதான் முக்கியம்... ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார்... சத்யராஜ் பளிச்!

மோகன் டச்சு இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாக நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் மோகன் டச்சு, நடிகர் சத்யராஜ், ஸ்ரீபதி, நாயகி நியா, நடிகர் கலைப்புலி ஜி சேகரன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

அடுத்தவனுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியாது... நான் இன்னும் ரெடியாகல... ‘குட் நைட்’ மணிகண்டன் பளிச்!

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. விக்ரம் வேதா திரைப்படத்துக்கு டயலாக் ரைட்டராகவும் பணியாற்றியுள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன், நடிகராக ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget