Entertainment Headlines: லியோ சிறப்புக்காட்சிக்கு அனுமதி.. ட்ரெண்டிங்கில் சமந்தா, யஷ்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Oct 11: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் பொங்கல் வெளியீடாக ஒன்றாக வெளியாகின. அப்போது துணிவு படத்தின் நள்ளிரவு ஒரு மணி சிறப்புக் காட்சியின் போது, சென்னை, ரோகிணி திரையரங்கின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர் ஒருவர், லாரி மீதிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் படிக்க
‘ராக்கி பாய்க்கு அதிர்ஷ்டம், அவ்ளோ தான்..’ -ரவிதேஜா கருத்தால் சர்ச்சை; கொந்தளிக்கும் ‘யஷ்’ ரசிகர்கள்!
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் ரவிதேஜா. சினிமாவில் பெரிய அளவிலான குடும்ப பின்னணி இல்லாமல் தொடர்ச்சியான உழைப்பால் சினிமாவில் இன்று தனக்கென மிகப்பெரிய ரசிகர்ளை சேர்த்துள்ள நடிகர் ரவிதேஜா. ரவிதேஜா தற்போது நடித்திருக்கும் திரைப்படம் டைகர் நாகேஷ்வர ராவ், ரவிதேஜா , நுபுர் சனோன், க்ரித்தி ச்னோன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க
“சினிமாவில் சமரசத்தை நாடாத கலைஞன்”.. இயக்குநர் ராமின் பிறந்தநாள் இன்று..!
இன்று இயக்குநர் ராமின் பிறந்தநாள். கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி , பேரன்பு என நான்கு படங்களை இயக்கியுள்ளார் ராம். இந்த நான்கு படங்களும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஈர்க்கின்றது. ஒரு குறிப்பிட்ட சாரார் இந்தப் படங்களில் உள்ள பிரச்சனைகளை பேசுகிறார்கள். இருதரப்பிலும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் மற்ற இயக்குநர்களைப் போல் இல்லாமல் ராமிடம் இருக்கும் ஒரு தனித்துவம் என்றால் இந்த இரு தரப்பு மக்களாலும் தொடர்ந்து அங்கீரகரிக்கப் படக்கூடிய ஒருவராகவும் இவர்களால் அதிக விவாதிக்கப் படக்கூடிய ஒரு ஆளுமையாகவும் அவர் இருக்கிறார் என்பதே நிதர்சனம். yமேலும் படிக்க
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் நாகினி சீரியல் நடிகையின் சகோதரி, கணவர் கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆயுதக்குழு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய டிவி நடிகையின் சகோதரி மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. மேலும் படிக்க
எழுந்த எதிர்ப்பு.. பணிந்தது லியோ படக்குழு.. ட்ரெய்லரில் இருந்து “அந்த வார்த்தை” நீக்கம்..!
லியோ படத்தின் ட்ரெய்லரில் நடிகர் விஜய் பேசிய கெட்டவார்த்தை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான எதிர்ப்பு எழுந்ததால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு வார காலமே உள்ளது. தூக்கம் வராமல் எப்போது அக்டோபர் 19 ஆம் தேதி ஆகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் “லியோ” படம் வெளியாகவுள்ளது. மேலும் படிக்க
'மூச்சடைக்கும் முத்தங்கள்' ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனாவின் அனிமல் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்!
அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அனிமல்’. தெலுங்கு, தமிழ் , இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம், சந்தீப் ரெட்டி வங்காவிற்கு பாலிவுட்டில் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனாவை வைத்து இவர் இயக்கியிருக்கும் திரைப்படம் அனிமல். மேலும் படிக்க