Israel-Hamas War: இஸ்ரேல் - ஹமாஸ் போரில் நாகினி சீரியல் நடிகையின் சகோதரி, கணவர் கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆயுதக்குழு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய டிவி நடிகையின் சகோதரி மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆயுதக்குழு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய டிவி நடிகையின் சகோதரி மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் பொது பகுதியாக உள்ள காஸாவுக்கு இருநாடுகளும் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அடிக்கடி அங்கு பிரச்சினை வெடிப்பது வழக்கமான ஒன்று தான். இதுவரை 4 முறைக்கு மேல் போர் நடந்துள்ள நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விட்டது.
காலை 6 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கிய நிலையில் பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலால் கட்டடங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இஸ்ரேலில் தரைமட்டமானது. காஸாவில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி காண்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.
View this post on Instagram
உலக நாடுகளும் இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், இந்திய டிவி நடிகையின் சகோதரி மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிறந்த யூத நாட்டைச் சேர்ந்தவரான மதுரா நாயக், புகழ்பெற்ற “நாகினி” சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ இஸ்ரேல்-ஹமாஸ் போரில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் “நான், மதுரா நாயக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு யூதர். நாங்கள் இப்போது இந்தியாவில் 3,000 பேர் மட்டுமே இருக்கிறோம்.எனது சகோதரி முறை உறவினர் ஓடயாவும், அவரது கணவரும் இரு குழந்தைகள் முன்னிலையில் கொல்லப்பட்டுள்ளனர். எனது குடும்பத்தினர் படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் ஹமாஸின் தீயில் எரிந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் வலியை உலகம் காணவே என் சகோதரி பற்றிய பதிவை வெளியிட்டேன். இந்த ஹமாஸின் பாலஸ்தீன சார்பு பிரசாரம் இஸ்ரேலிய மக்களை கொலைகாரர்களாக காட்ட விரும்புகிறது. இது சரியல்ல. உங்களைத் தற்காத்துக் கொள்வது பயங்கரவாதம் அல்ல” என மதுரா நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Mia Khalifa: “பிசினஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை; ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்பேன்” - மியா கலிஃபா பதிலடி