மேலும் அறிய

Animal First Single: 'மூச்சடைக்கும் முத்தங்கள்' ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனாவின் அனிமல் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்!

ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் அனிமல் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

அனிமல்

அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அனிமல்’. தெலுங்கு, தமிழ் , இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம், சந்தீப் ரெட்டி வங்காவிற்கு பாலிவுட்டில் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

தற்போது  ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனாவை வைத்து இவர் இயக்கியிருக்கும் திரைப்படம் அனிமல்.  அனிமல் படத்தின் அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானதில் இருந்து இந்தப் படத்துகாக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்து வருகிறார்கள். 

ரன்பீர் கபூரின் புதிய அவதாரம்

பர்ஃபி, ஏ ஜவானி ஹேய் தீவானி, ராக்ஸ்டார், தமாஷா போன்ற சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரன்பீர் கபூரை நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஒரு புதிய கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலாக இருந்து வரும் நிலையில், அனிமல் படத்தில் அவரது லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ஒரு சிறிய முன்னோட்ட வீடியோ வெளியாகியது. உணர்ச்சிகரமான ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக அனிமல் படம் இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்த வீடியோ கொடுத்தது. 

அனிமல் டீசர்

தொடர்ந்து, அனிமல் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த டீசரில் ரன்பீர் கபூர் எந்த மாதிரியான ஒரு சூழலில் வளர்கிறார், அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான உறவு எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது. அவருக்கும் அவரது மனைவியான கீதாஞ்சலிக்கு இடையிலான உறவு எப்படி மோதிக் கொள்கிறது, தன்னுடைய தந்தையின் வளர்ப்பினால் தான் எப்படி இவ்வளவுப் பெரிய கேங்க்ஸ்டராக மாறுகிறார் என கதை பெரிதாகிறது. 

 பாலிவுட் எண்ட்ரி கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா

அனிமல் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.  ஸ்ரீவல்லியாக தென் இந்திய ரசிகர்களிடம் இடம்பிடித்த ராஷ்மிகா அனிமல் படத்தில் கீதாஞ்சலி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கலாம்

முதல் பாடல்

 இந்நிலையில் அனிமல் படத்தின் முதல் பாடலான ஹுவா மேன் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தி , தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலின் தொடக்கத்தில் கீதாஞ்சலி வீட்டாரிடம் தங்களது காதலைத் தெரிவிக்கிறார்கள் ரன்பீர் கபூரும் ராஷ்மிகாவும். குடும்பத்தினர் எல்லாரும் திட்டிக்கொண்டிருக்க இருவரும் முத்தமிட்டுக் கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து விமானத்தில் ஏறி இருவரும் செல்வது பாடலாக நீள்கிறது. கதாநாயகன் ரன்பீர் தயக்கமில்லாத நம்பிக்கையான ஒருவனாக இருக்க, வெட்கப்படும் கூச்ச சுபாவம் கொண்ட மொத்த பாடலிலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் ரன்பீர் கபூரின் கண்களை மட்டுமே ரசிக்கும் ஒருவராக ராஷ்மிகா நடித்துள்ளார். பார்ப்பதற்கு அர்ஜுன் ரெட்டியில் வரும் அதே இரண்டு கதாபாத்திரங்கள் மாதிரி இந்தப் பாடல் இருந்தாலும் கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது.

 

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget