மேலும் அறிய

Celebrities Ramzan wishes: விஜய் முதல் ஷாருக்கான் வரை.. ரமலான் வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள்!

திரை பிரபலங்கள் பலரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இன்று அதிகாலையிலே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில்  இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அந்த வகையில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம். 

Celebrities Ramzan wishes: விஜய் முதல் ஷாருக்கான் வரை.. ரமலான் வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், புதிதாக துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான நடிகர் விஜய், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாத்துகளை தெரிவித்து கொண்டார். "புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்து இருந்தார். 

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய்யை வைத்து தற்போது 'GOAT' படத்தை இயக்கி வருகிறார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இன்று மதியம் 1.05 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

நடிகர் பிரபு தேவா இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். 

80ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் ராமராஜன் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சாமானியன்'. நடிகர் ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சாமானியன் படக்குழு இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. 

மேலும் இந்த சிறப்பான தருணத்தில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல  பாலிவுட் நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

Celebrities Ramzan wishes: விஜய் முதல் ஷாருக்கான் வரை.. ரமலான் வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள்!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இன்றைய தினத்தை 'மைதான்' படத்தை பார்த்து கொண்டாடுங்கள் என வீடியோ பகிர்ந்து இருந்தார். 

நடிகர் ஷாருக்கான் இன்ஸ்டாகிராம் மூலம் ஈத் முபாரக் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதுடன் சஜித் நதியத்வாலா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் 'சிகந்தர்' படத்தில் நடிக்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும் நடிகை சோஹா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, அர்ஜுன் கபூர், ஷாஹித் கபூர், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் சோசியல் மீடியா மூலம் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget