மேலும் அறிய

"I am waiting.." : அப்பா மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் துல்கர்? அவரே சொன்ன சீக்ரெட் தெரியுமா?

இதற்கிடையில் துல்கர் சல்மான் அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

துல்கர் சல்மான் :

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான் . தற்போது சீதா ராமம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து , அதற்கான புரமோஷன் வேலைகளில் தற்போது கலந்துகொண்டு வருகிறார். ஹனு ராகவ்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் காதலை கசிந்துருக செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். போருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அழகான ஒரு காதல் கதையாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

மம்முட்டியுடன் துல்கர் ?

தமிழ் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இவர் மலையாள சினிமாவின் மெஹா ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். இவரது மகன்தான் துல்கர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க வேண்டும் என்பது மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசையும் கூட. இது குறித்து துல்கரிடம் கேட்டபொழுது “ எனக்கு அதுதான் ஆசை .அவருடன் ஒரு படம் எடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்; அது எந்த மொழியில் இருந்தாலும் சரி. . நான் ஏற்கனவே அவரிடம் கேட்டிருக்கிறேன், அவருடைய முடிவுக்காக நான் காத்திருக்கிறேன்.” என்றார். பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே திரையில் காண்பது அரிதான செயல்தான். அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் சொல்லவே  வேண்டாம் . எனினும் துல்கரின் ஆசையை மம்முட்டி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் துல்கர் சல்மான் அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

துல்கர் அடுத்த பட அப்டேட் :

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் துல்கர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து இயக்குநர் ஆர்.பால்கி உருவாக்கிய `சுப்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தின் முதல் டீசர் வெளியானது. `ஹேப்பி பர்த்டே’ பாடலைப் பாடிக்கொண்டே நடிகர் துல்கர் சல்மான் செய்தித்தாள்களை வைத்து மலர்களை செய்வதாகவும், சன்னி தியோல் கதாபாத்திரத்தையும் காட்டும் இந்த டீசரில், படத்தின் தலைப்பின் கீழ் ‘Revenge of the Artist’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 80-களின் பிரபலமான பாலிவுட் பாடலான `வக்த் நே கியா க்யா ஹசீம் சிதம்’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியிலான இந்தத் திரைப்படம் பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்படுவதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:  Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka Aasai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
Embed widget