லைப்ல ஜெய்ச்சா நீதான்பா டானு… திரையரங்கில் ஜெயித்த டான் திரைப்பட சக்ஸஸ் பார்ட்டி! புகைப்படங்கள் வைரல்!
லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து டான் படத்தை தயாரித்தன. டான் பெயர் போட்ட கேக் உடன் சக்சஸ் பார்ட்டி களைகட்டியது.
டாக்டர் படத்தைத் தொடர்ந்து டான் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், பிரம்மாண்ட டான் பெயர் போட்ட கேக்கை வெட்டி படக்குழுவினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, சிவாங்கி மற்றும் தொழில்நுட்ப கலைஞருடன் இந்த வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், டான் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தற்போது கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது டான் படம். இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கடந்த வார இறுதியில் திரையரங்குகளில் அரங்கு கொள்ளாத காட்சிகளாக காணப்பட்டது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூலிலும் சிறப்பான கலெக்ஷனை குவித்து வருகிறது. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து டான் படத்தை தயாரித்தன. டான் பெயர் போட்ட கேக் உடன் சக்சஸ் பார்ட்டி களைகட்டியது.
கடந்த 5 நாட்களில் மட்டுமே படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. மேலும் வார நாட்களிலும் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது டான் படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகவும் பெரிய அளவில் வரவேற்பை தந்து வருகின்றனர்.
Thank you one & all for making #DON 😎 a BLOCKBUSTER. The #PrivateParty gang just got bigger with all your love ♥️#DONBlockbuster 💥@Siva_Kartikeyan @SKProdOffl @KalaiArasu_ @RedGiantMovies_ @anirudhofficial @Dir_Cibi @priyankaamohan @iam_SJSuryah @thondankani @DoneChannel1 pic.twitter.com/mJnZAlB1Tw
— Lyca Productions (@LycaProductions) May 18, 2022
இந்த திரைப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கேக் கட்டிங்கின் போது டான் படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகை சிவாங்கி உடனிருந்தனர். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது தொழில்நுட்ப கலைஞர்கள், எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலையரசு உள்ளிட்ட பலர் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்நிலையில் அவரது அடுத்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது சிவகார்த்திகேயனுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த உற்சாத்துடன் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் கடந்த 4 நாட்களில் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 35 கோடி ரூபாய்க்கும் மேல் டான் படம் வசூலித்துள்ளது. உலகளவில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் டான் படம் வசூலித்துள்ளது.