cibi chakravarthy: விஜய் உடன் கை கோர்க்கும் ‛டான்’ இயக்குனர்? ஓவர் நைட்டில் பேச வைத்த ‛ஓல்டு’ போட்டோ!
‛சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கினர். அவருக்கு அடுத்த வாய்ப்பாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல..’
‘டான்’ படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி முன்னதாக மெர்சல் படத்தில் நடித்திருந்தது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘டான்’ திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர். திருச்சியில் உள்ள பன்னாரி அம்மன் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர் அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளார்.
View this post on Instagram
அவர் தொடர்ந்து அட்லி இயக்கிய மெர்சல் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு நடிக்கவும் செய்திருக்கிறார். அப்போது விஜய் உடன், அவர் எடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை வைத்து, விஜய் உடன், சிபி சக்கரவர்த்தி இணையப் போகிறார் என பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கினர். அவருக்கு அடுத்த வாய்ப்பாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல, தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கியுள்ள சிபி சக்கரவர்த்தியும் விஜய்யுடன் இணைவார் என்று கிசுகிசு பேசப்படுகிறது,
சிபி இயக்கிய சாலையின் சகதியில் குறும்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் டான் படத்தில், டாக்டரில் சிவாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். முன்னதாக படம் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து RRR படம் கடந்த மார்ச் 25ம் தேதி வெளியானதால் ‘டான்’ படம் மே மாதம் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.