Ethir Neechal Marimuthu : "பெண்கள் நிமிர்ந்து நடந்தா நல்லாவா இருக்கும்? குனிஞ்சுதான் நடக்கணும்.." : கடுப்புகளை அள்ளிய மாரிமுத்து
இவர் பேசும் கருத்துக்கள் சமீபத்தில் சர்ச்சை ஆகி வருகின்றன. இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகர்களின் சம்பளம், பான் இந்திய திரைப்படம், சங்கரின் இந்தியன் திரைப்படம் குறித்தெல்லாம் பேசி இருந்தார்.
வெள்ளித்திரையில் பல குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் பல மறக்கமுடியாத கதாபாத்திரமாக பதித்தவர் இயக்குனர், நடிகர் ஜி மாரிமுத்து. தற்போது சின்னத்திரையிலும் நுழைந்து மிகப் பெரிய வெற்றி சீரியலாக ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ரோலில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார், அதுபோக பல படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தியில் தனுஷுடன் ஆத்ரங்கி ரே திரைப்படத்திலும் நடித்திருந்தார். தானே இயக்குனர் என்பதால் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு, எளிதில் உயிர் கொடுத்து அந்த கதாபாத்திரத்தை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். இவர் வில்லனாக நடித்து வெளிவந்த பரியேறும் பெருமாள் மாரிமுத்துக்கு பல விருதுகள், பாராட்டுக்களை வாங்கி தந்தது. தற்போது எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார். இவர் பேசும் கருத்துக்கள் சமீபத்தில் சர்ச்சை ஆகி வருகின்றன. இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகர்களின் சம்பளம், பான் இந்திய திரைப்படம், சங்கரின் இந்தியன் திரைப்படம் குறித்தெல்லாம் பேசி இருந்தார்.
இந்தியன் திரைப்படம்
இந்தியன் திரைப்படம் குறித்து பேசிய அவர், "நானே ஒரு நாள் சங்கர் சார்கிட்ட கேட்டேன், என்னதான் சார் பிரச்சனைன்னு. அவரும் எதுவும் பெருசா சொல்லிக்கல. ஆனா அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்கு. மூணு பெரிய தலை இதுல இருக்கு, சங்கர் சார், கமல் சார், லைக்கா, இவங்க மூணு பேரும் மனசு வச்சா நடக்கும். சங்கர் சாரும் இப்போ தெலுங்கு படம் முடிக்குற ஸ்டேஜ்க்கு வந்துட்டாரு. அடுத்தது இந்தியன் பண்ணா நல்லாருக்கும். நானும் எதிர்பாத்துட்டு இருக்கேன், நானும் சமுத்திரகனி சாரும் அண்ணன் தம்பியா நடிக்குறோம். ரொம்ப முக்கியமான கதாபாத்திரம்" என்று கூறினார்.
பான்-இந்தியன் திரைப்படம்
அவரிடம் கேஜிஎப் போன்ற பான் இந்திய படங்களை தமிழ் நடிகர்களை வைத்து இயக்கினால் ஒடுமா என்று கேட்ட கேள்விக்கு, "கேஜிஎப் போன்ற பான் இந்திய படங்கள் காலத்தின் தேவை. அது நடந்துட்டு இருக்கு, அதை ஏத்துக்க வேண்டியது தான். அதை தமிழ்ல ஒரு ஹீரோவ வச்சு எடுத்தா ஒடுமா ஓடாதான்னு இந்த உலகத்துல யாருக்குமே தெரியாது. அதை முடிவு பண்ண வேண்டியது நாம இல்ல, ஆடியன்ஸ்தான்", என்றார்.
நடிகர்களின் சம்பளம்
அதுபோன்ற படங்களை எடுக்க நம் ஹீரோக்களின் சம்பளம் ஒரு காரணமா என்று கேட்டதற்கு, "நியாயம்தான் அவங்க கேக்குற சம்பளம். சும்மா எப்படி அவங்களுக்கு சம்பளம் கொடுப்பீங்க. அவங்களுக்கு மார்க்கெட் இருக்கு கொடுக்குறீங்க. இலைன்னு ஒரு டைட்டில்ல, புது நடிகர், புது இயக்குநர், புது தயாரிப்பாளர் அப்படி ஒரு படம் வந்தா போய் பாப்பீங்களா. அப்போ உங்களுக்கு அஜித் விஜய் தேவை பட்றாங்கல்ல… அப்புறம் அவங்க கேக்கமா என்ன செய்வாங்க. அவங்க என்ன அடிச்சா கேக்குறாங்க? ஒரு குறிப்பிட்ட சம்பளம் கேக்குறாங்க, அது ஓகேன்னா கொடுக்குறீங்க அவ்வளவுதான். இந்த சம்பளத்த குறைக்குனும்ன்ற கம்ப்ளெயின்ட 40 வருஷமா கொடுத்துட்டுதான் இருக்காங்க. ஆனா யாரும் இதுவரைக்கும் குறைக்கல. அந்த கம்ப்ளெயின்ட்ட எந்த கோர்ட்ல கொண்டு போயி கொடுக்க போறீங்க… முடியாது. அதுதான் ரியாலிட்டி", என்று பேசினார்.
உங்களுக்கும் பிற்போக்கு கருத்துக்கள் இருப்பதாக தெரிகிறதே என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, ஆமாம் மணப்பெண்கள் புடவை கட்டி, ஆடிக்கொண்டு வரமுடியாது. ஆணுக்கு கொஞ்சம் பின்னால் நடந்து வருவதுதான் தமிழ் பண்பாடு என்று பேசினார். இந்த கருத்துக்கு பரவலாக எதிர்கருத்துக்களே குவிந்தன. அவரது சீரியல் கேரக்டரை போலவே அவர் பேசுவதாக விமர்சனங்கள் எழுகின்றன
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்