என்ன வேணும் உனக்கு..கொட்டி கொட்டி கிடக்கு..நாளை ரிலீஸாகும் படங்கள்
June 20 Release : தமிழ் மற்றும் இந்தி மொழியில் நாளை ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் படங்களைப் பார்க்கலாம்

அதர்வா நடித்துள்ள DNA
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா , நிமிஷா சஜயன் , ரமேஷ் திலக் நடித்துள்ள டிஎன்ஏ திரைப்படம் நாளை ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கேபி, சுப்ரமணியன் சிவா, கருணாகரன், பசங்க சிவகுமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ள நிலையில்ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சிவா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள். நாளை ஜூன் 20 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது
குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா , ஜிம் சார்ப் ஆகியோர் நடித்துள்ள படம் குபேரா. தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஶ்ரீ வெங்கடேஸ்வரா மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. வாத்தி படத்தைத் தொடர்ந்து தனுஷ் நேரடியாக தெலுங்கில் நடித்துள்ள படம் குபேரா. தமிழ்நாட்டைவிட இப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிகளவில் வரவேற்பு இருந்து வருகிறது . நாளை ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது
சிதாரே ஜமீன் பர்
ஆமீர் கான் நடித்த தாரே ஜமீன் பர் படத்தின் தொடர்ச்சியாக இந்தியில் உருவாகியுள்ள படம் சிதாரே ஜமீன் பர். திவி நிதி ஷர்மா எழுதி பிரசன்னா ஆர்.எஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக், அரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பென்ட்சே, சம்வித் தேசாய், சிம்ரன் மங்கேஷ்கர், ஆயுஷ் பன்சாலி, டோலி அலுவாலியா, குர்பால் சிங், பிரிஜேந்திர கலா, பிரிஜேந்திர கலா இப்படத்தில் நடித்துள்ளார்கள். நாளை ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
1 Tingu Basketball Coach, 10 Toofani SITAARE aur unki journey.
— Aamir Khan Productions (@AKPPL_Official) May 13, 2025
Watch #SitaareZameenPar #SabkaApnaApnaNormal, 20th June Only In Theatres.
Trailer Out Now! 🌟
Directed by: @r_s_prasanna
Written by: @DivyNidhiSharma
Produced by: #AamirKhan @aparna1502
Starring: #AamirKhan… pic.twitter.com/PNozt7mHrl






















