Diesel: பற்றி எரியுமா டீசல்? ஹாட்ரிக் வெற்றி தருவாரா ஹரிஷ் கல்யாண்?
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாக உள்ள டீசல் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியைத் தருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு குறிப்பிடத்த இடத்தைப் பிடித்துள்ளார்.
டீசல்:
இந்த சூழலில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக டீசல் படம் வெளியாக உள்ளது. டூட், பைசன் படங்களுக்கு போட்டியாக இந்த படம் வெளியாக உள்ளது. காதல் நாயகனாக தொடக்க காலத்தில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் சமீபகாலமாக கதைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பார்க்கிங் படம் இவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்ததுடன் வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதையடுத்து, கடந்தாண்டு வெளியான லப்பர் பந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த சூழலில் தற்போது டீசல் படம் வெளியாக உள்ளது.
ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா?
அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களைத் தந்த ஹரிஷ் கல்யாண் ஹாட்ரிக் வெற்றியைத் தருவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டீசல் படம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விற்பனையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். கச்சா எண்ணெய் கள்ளச்சந்தையும், திடீரென மாயமாகும் 2 கோடி லிட்டர் கச்சா எண்ணெய்யும் படத்தின் மையக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
தீபாவளி ரிலீஸ்:
வரும் 17ம் தேதி வெளியாகும் இந்த படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். பிரபு, ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின கதேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். வினய் இந்த படத்தில் வில்லனாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
நேற்று வெளியான இநத படத்தின் ட்ரெயிலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிட்டியுள்ளது.





















