மேலும் அறிய

Diwali 2022 : கோலிவுட் முதல் பாலிவுட் வரை..தீபாவளியன்று சரவெடியாக வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள்!

Diwali Movie Release 2022 Tamil:கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த தீபாவளிக்கு திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படங்கள்.

தீபாவளி பட ரீலீஸ்:

இந்தியாவைப் பொருத்த வரை, பண்டிகைகளுக்கும் பலகாரங்களுக்கும் எவ்வளவு தொடர்பு உள்ளதோ, அதே போல சினிமாவிற்கும் தீபாவளிக்கும் அவ்வளவு தொடர்பு இருக்கிறது. கோலிவுட் சினிமாவைப் பொறுத்த வரை, பண்டிக்கைக் காலங்களில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். குறிப்பாக, விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னனி ஹீரோக்களின் படங்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது கண்டிப்பாக வெளியாகிவிடும். அதே போல, இந்த வருடமும் சில முக்கிய ஹீரோக்களின் படம் ரிலீஸாக உள்ளது.

கார்த்தியின் சர்தார் :

Diwali 2022 : கோலிவுட் முதல் பாலிவுட் வரை..தீபாவளியன்று சரவெடியாக வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள்!

கோலிவுட்டில், இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் பி எஸ் மித்ரன். இவர், தற்போது கார்த்தியை வைத்து சர்கார் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். படம், தீபாவளியான அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது. 90’ஸ் காலகட்டங்களில் முன்னனி நடிகையாக இருந்த லைலா, இப்படத்தின் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளார். இதனால், இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது. இப்படத்திற்காக நடிகர் கார்த்தி பல்வேறு கெட்-அப்களில் உள்ளது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமீபத்தில் வைரலானது. அது மட்டுமன்றி,  கார்த்தி அப்பா-மகன் என இரு வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ்:

Diwali 2022 : கோலிவுட் முதல் பாலிவுட் வரை..தீபாவளியன்று சரவெடியாக வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள்!

சத்யராஜ், சிவகார்த்திகேயன், வெளிநாட்டு நடிகை மரியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ரின்ஸ். தெலுங்கு டைரக்டரான அனுதீப் கே வி இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் வழக்கமான கான்செப்டான காமெடி-காதலே இப்படத்திலும் மைய்யக்கருவாக காண்பிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் சர்தார் படத்துடன் மோதும் திரைப்படமாக தயராகியுள்ளது ப்ரின்ஸ். சிவகார்த்திகேயனின் படம் ஒன்று தீபாவளியன்றி வெளியாவது இதுவே முதல் முறை. தமிழ்-தெலுங்கு என பைலிங்குவள் படமாக உருவாக்கப்பட்டுள்ள ப்ரின்ஸ் படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

அக்ஷய் குமாரின் ராம் சேது:

Diwali 2022 : கோலிவுட் முதல் பாலிவுட் வரை..தீபாவளியன்று சரவெடியாக வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள்!

பாலிவுட் திரையுலகில், தி ஸோயா ஃபேக்டர், தேரா பின் லேடன் உள்ளிட் படங்களை இயக்கி புகழ்பெற்றவர் அபிஷேக் ஷர்மா. இவர், தற்போது, பிரபல நடிகர் அக்ஷய் குமாரை வைத்து ராம் சேது படத்தை டைரக்டு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர், பல மில்லியன் வியூஸ்களை கடந்து ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. உண்மையிலேயே ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா? என்ற மர்ம முடிச்சை கண்டறிய புறப்படும் ஹீரோ மற்றும் அவனது குழுவினரின் கதையாக, அட்வென்சரஸ் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம், அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது. இதில், அக்ஷய் குமாருடன் இணைந்து, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மோகன் லாலின் மான்ஸ்டர்:

Diwali 2022 : கோலிவுட் முதல் பாலிவுட் வரை..தீபாவளியன்று சரவெடியாக வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள்!

‘லாலேட்டன்’ என அழைக்கப்படும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லாலின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் மான்ஸ்டர். த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை வைசாக் இயக்கியுள்ளார். மோகன் லால் ஹீரோவாக நடிக்க, லக்ஷமி மஞ்சு, பிஜ்ஜு பாப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கி விட்டது. கொரோனாாவினால் படப்பிடிப்புகளில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக இம்மாதம் 21 ஆம் தேதியன்று படம் வெளியாகிறது.

அஜய் தேவ்கன் நடிப்பில் தேங் காட்::

Diwali 2022 : கோலிவுட் முதல் பாலிவுட் வரை..தீபாவளியன்று சரவெடியாக வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள்!

டி சீரிஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும படமான தேங் காட், ஃபேன்டசி, காமெடியாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கன், சித்தார்த மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

படவெட்டு:

Diwali 2022 : கோலிவுட் முதல் பாலிவுட் வரை..தீபாவளியன்று சரவெடியாக வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள்!

தீபாவளியன்று வெளியாகும் மலையாளப்படங்களின் லிஸ்டில் அடுத்து உள்ள படம் படவெட்டு. அருவி பட புகழ் அதிதி பாலன், மஞ்சு வாரியர் ஆகியோர்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, நிவின் பாலி கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை புது முக இயக்குனர் லிஜூ க்ரிஷ்ணா படத்தை இயக்கியுள்ளார். படம், தீபாவளியான அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகிறது.

ஒரி தேவுடா:

Diwali 2022 : கோலிவுட் முதல் பாலிவுட் வரை..தீபாவளியன்று சரவெடியாக வெளிவர காத்திருக்கும் திரைப்படங்கள்!

தமிழில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு தழுவலே, ஒரி தேவுடா. காதல்-காமெடி கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் லிட்டில் திங்ஸ் வெப் சீரிஸ் மூலம் பிரபலமான நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார். படம், வருகின்ற 21 ஆம் தேதி வெளியாகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget